வித்தியா படுகொலையின் சந்தேகநபர் இருவர் விடுதலை!

saddamயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இரு சந்தேகநபர்கள் இன்று (27) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேகநபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் இருவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்கள்.

Share This Post

Post Comment