நைஜீரியாவில் பட்டினிச் சாவின் பிடியில்75,000 குழந்தைகள்

nigeria-300x180போகோஹராம் தீவிரவாதத்தினால் நைஜீரியாவில் சுமார் 75,000 குழந்தைகள் பட்டினிச் சாவின் பிடியில் இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் எச்சரித்துள்ளது. இது, இந்த 7 ஆண்டு கால போகோஹராம் தீவிரவாத நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட 20,000 பேர் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகமானது. உலகிலேயே மிக மோசமான மனிதார்த்த நெருக்கடியில் வடகிழக்கு நைஜீரியா உள்ளதாக எச்சரித்துள்ள ஐ.நா. ஊட்டச்சத்துக் குறைபாடு சொல்லொணா நிலைமைக்குச் சென்றுள்ளதாக எச்சரித்து, உதவிபுரிபவர்களும் உலக நாடுகளும் துரிதமாக இதனைத் தடுக்கச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் இரண்டாம் நிலை நோய்களான வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழல் கிருமி நோய் ஆகியவற்றினால் இறந்து விடுவதாக, நைஜீரியா யூனிசெஃப் ஊட்டச்சத்து குறைபாடு துறை தலைவர் அர்ஜன் டி வாக்ட் என்பவர் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். வடகிழக்கு நைஜீரியாவின் 50% பகுதியில் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணத்தை எதிர்நோக்குவதாக வாக்ட் எச்சரிக்கிறார்.

“உலக அளவில் இப்படிப்பட்ட நிலையை நீங்கள் பார்க்க முடியாது. 5 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் இருக்கும் அதே நிலைதான் இங்கும் உள்ளது. 2010-2012 இடையே போர் காரணமாக சோமாலியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சம், பட்டினிக்கு சுமார் 2,60,000 உயிர்கள் பலியாகியுள்ளனர்” என்கிறார் வாக்ட். யூனிசெஃப் நைஜீரிய குழந்தைகளைக் காப்பாற்ற 115 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. உதவிகள் ‘அவசரம்’ என்று கூறும் யூனிசெஃப், ‘இந்தக் குழந்தைகளின் உயிர் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்துள்ளது. பணம் இல்லாததால் பாதிக்கப்பட்ட சுமார் 7,50,000 மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்கிறது யூனிசெஃப். போகோஹராம் தீவிரவாதத்திலிருந்து வெளியேறிய சுமார் 2.6 மில்லியன் விவசாயிகள் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் வறுமையில் தத்தளித்து வருகின்றனர்.

நைஜீரிய அகதிகள் முகாமிலிருந்து ராணுவம் அழைத்து வந்திருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் வேளாண் தொழிலில் ஈடுபடுவதற்கான சீசன் முடிந்து விட்டது. ஆனால் போகோஹராம் நகரப்பகுதிகளுக்கு வெளியே இன்னமும் தாக்குதல் நடத்தியபடிதான் உள்ளது. உணவு நெருக்கடியில் இருக்கும் 40 லட்சம் பேர்களில் சுமார் 22 லட்சம் பேர் போகோஹராம் வலுவாக உள்ள பகுதிகளில் சிக்கியுள்ளனர். போகோஹராம் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய பகுதிகளில் மக்களை சென்றடைய வழியில்லை. இதில் 65,000 பேர் கடும் பஞ்சம் பாதித்த பகுதிகளில் வாழ்பவர்கள் போன்ற நிலையில் உள்ளனர். நெருக்கடி ‘பேரழிவு மட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது’ என்று உதவிக்குழு மருத்துவர்கள் கூறுகின்றனர். “பலர் ஒருவேளை உணவு உண்பதே சில நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலை இருந்து வருகிறது. அதுவும் அந்த ஒரு வேளையும் கஞ்சி மட்டுமே கிடைக்கிறது.

பசியுடன் தூங்கச் செல்பவர்கள் அதனை போக்க வழியின்றி, மாற்ற வழியின்றி கண் விழிக்கின்றனர்” என்று ஆக்ஸ்பாம் உதவிக்குழு தெரிவித்துள்ளது. போகோஹராம் போராளிகள் மனித உதவி வாகனத்தை கடந்த ஜூன் மாதத்தில் தாக்கியதில் யூனிசெஃப் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்ததால், யூனிசெப் தனது பணியிடத்தை குறுக்கிக் கொண்டுள்ளது. மைதுகுரி முகாம்களில் அதிகபட்சமாக குழந்தைகள் பட்டினியின் பிடியில் சிக்கியுள்ளனர். “அவசரநிலை என்று கூறும் நிலையை விட இறப்பு விகிதம் 5 மடங்கு அதிகமாக உள்ளது, இதற்கு முழுக்காரணம் பட்டினியே” என்று ஐ.நா. குழந்தைகள் நிதியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.


Related News

 • ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!
 • சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்
 • மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு
 • 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 • வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்
 • அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து
 • கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – உயிரைக் காப்பாற்ற போராடும் டாக்டர்கள்
 • நஃப்டா பேச்சுவார்த்தைக்குத் தயார் – கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *