புதிதாக 35 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

ekuruvi-aiya8-X3

கல்வி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் புதிதாக 35 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றது.

இதன்போது மேலைத்தேய சங்கீதத் துறையில் பட்டம் பெற்ற 35 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்கான நியமனங்களை வழங்கி வைத்த கல்வி அமைச்சர், புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

தங்கள் துறைகளை தெரிவு செய்துகொண்ட நீங்கள் இந்தத் துறையில் மேலும் முன்னேறுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் கல்வித்துறையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களது தகுதிகளை அறிவதற்காக பரீட்சைகள் நடத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

pattathari_teachers_1-450x230 pattathari_teachers_2-450x201 pattathari_teachers_3-450x231 pattathari_teachers_4-450x199 pattathari_teachers_5-450x212 pattathari_teachers_6-450x234 pattathari_teachers_7-450x194

Share This Post

Post Comment