வேலையற்ற பட்டதாரிகளுக்கு வடக்கு மாகாணசபையில் வேலைவாய்ப்பு!

Thermo-Care-Heating

c-v-k-sivagnanam-1-720x480வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை வடக்கு மாகாண சபை அமைச்சுக்களில் பணிக்கமர்த்துமாறு வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் நீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விசேட அமர்வு இன்று வடக்கு மாகாணசபைக் கட்டத்தில் நடைபெற்றது.

இதன்போது, அண்மையில் தான் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், இதன்போது வடக்கு மாகாணசபையின் அமைச்சுகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அமர்வு நிறைவுபெற்றதும் குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment