முப்பது நாளாக பட்டமும் கரைகிறது

ekuruvi-aiya8-X3

17424697_1847845522098270_7543206752332009520_n

முப்பது நாளாக பட்டமும் கரைகிறது
மட்டு நகர் வீதியில் காந்தி பூங்கா
அருகே எங்களின் வேதனை கண்டு
காந்தியின் சிலைகூட சிரம் குனிகிறது ஏக்கத்துடன்..

இளமையில் கல்வி சிலையில்
எழுத்து என்பார்கள் அதை மனதில்
கொண்டுதானே பட்டம் பயின்றோம்.

பொய்யா இப்போது பட்டப்படிப்பு
வேலைவாய்ப்பு இல்லா நாட்டில் எதற்கு பட்டப்படிப்பு
உணர மறுக்கும் நல்லாட்சி
அரசு வேண்டும் எனக்கு வேலை.

காலை மாலை கண் விழித்து படித்தோம்
வீதியில் நிற்பதற்கா இல்லை படித்த
படிப்பிற்கு பதவி கிடைக்கவா
பட்டாதாரி என்று பெயருக்கு மட்டும்
வாழ்க்கை ஊரில்.

கண்ட கனவு அனைத்தும் கண்ணீருடன்
வீதியில் ஏக்கங்களும் வலிகளும் பட்டம்
படித்தவனிற்குத்தான் தெரியும்
படித்தது தவறா?
பட்டம் தவறா?

நிலவுரிமைக்கு போராட்டம்
வாழ்வு உரிமைக்கு போராட்டம்
இன்று தொழில் உரிமைக்கும் போராட்டம்.

எங்களுக்கு இந்த நிலை என்றால்
இனி வருங்கால சந்ததியினர் நிலையை
என்னிப்பாருங்கள்?

படித்து பெற்ற பட்டம் கூட வடுவாய் ஆயிற்று
வீதியோரத்தில் மனதில் பயின்ற பட்டத்திற்கு
எத்தனை சிரமம் எங்கள் வாழ்வில்
விடிவெள்ளி தோன்ற வில்லை இன்னும்.

வட்ட மேசை போட்டு தன்சுயநலம் பேசுபவர்களே
வீடுவீடாக கரம் கூப்பி பிச்சை கேட்பவர்களே
தேசத்தை திருதுமுன் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்
நிமிர்ந்த முதுகில் கூன் விழுந்த அடிமைகளா நீங்கள்?

புரட்சி தோல்வியை சந்தித்த
வரலாறும் இல்லை.

—கதிகரன்

 

Share This Post

One Comment - Write a Comment

Post Comment