காங்கேசன்துறை பாடசாலை அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

Facebook Cover V02

Captureயாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபர் அளவெட்டியிலுள்ள தனது தாயாரின் வீட்டிலிருந்து நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது 58), என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாயில் வசிக்கும் குறித்த அதிபர் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தற்போது எவருமே வசிப்பதில்லை.

காலையில் வீட்டிலிருந்து சென்ற அதிபரைக் காணாது வீட்டார் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இதன்போது அளவெட்டி வீட்டிலும் தேடியபோது தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சமயம் வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்டதையடுத்து வீட்டி உறவினர்கள் திறந்து பார்த்தபோது மின்சார வயரினால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டது.

இதனையடுத்து உறவினர்கள் தெல்லிப்பளை காவல்துறையினருக்கு அறிவித்தனர். தற்போது மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share This Post

Post Comment