தாத்ரா நாகர் ஹெவெலி யூனியன் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

Thermo-Care-Heating

Boat-capsizes-in-Dadra-and-Nagar-Haveli-5-deadமகாராஷ்டிரா மாநிலம அருகே உள்ள தாத்ரா மற்றும் நாகர் ஹெவெலி யூனியன் பிரதேசத்தில் 25 பயணிகளுடன் சென்ற படகு துத்னி ஏரியில் கவிழ்ந்து மூழ்கியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக யூனியன் பிரதேசத்தின் அதிகாரி பிரபுல் தெரிவித்தார்.

அனைத்து சுற்றுலா பயணிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கான்வெல் நகரில் உள்ள ரிசார்ட்டிற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்.

விபத்துக்குள்ளான படகு ரிசார்ட் முதலாளியால் புதிதாக வாங்கப்பட்டது. நகருக்கு வெளியே இந்த ஏரி அமைந்து உள்ளது. படகில் காப்பாற்றப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ideal-image

Share This Post

Post Comment