பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்தநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

president-and-prime-minister-wish-lata-mangeshkar-on-herபாலிவுட்டின் பிரபல பாடகியாக சிறந்து விளங்குபவர் லதா மங்கேஷ்கர். ரசிகர்கள் இவரை மெல்லிசை அரசி என அழைத்து வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர் தனது 88-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது குரல் நம் நாட்டின் மெல்லிசை மற்றும் ஆன்மாவாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், லதா மங்கேஷ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது மெல்லிசை குரல் இந்தியா முழுவதும் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது. அவர் நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பாலிவுட் பிரபலங்கள், முக்கிய தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் லதா மங்கேஷ்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share This Post

Post Comment