மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

ekuruvi-aiya8-X3

mahinthaசிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாடுகளின் தூதரகங்களினால் இவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அயல் நாடுகளின் புலனாய்வாளர்களும் இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டு எதிர்க் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்து தனித்தனியாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரது கௌரவத்தைக் காக்கும் பொருட்டே குறித்த தூதரக அதிகாரிகளாலும், புலனாய்வு அதிகாரிகளாலும் இவ்வறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மகிந்த ராஜபக்ஷ தாமதிக்காது ஒரு தீர்மானத்துக்கு வந்தால் அது அவருக்கும் அவரது கட்சி உறுப்பினர்களுக்கும் நல்லது எனவும் கூட்டு எதிரணிகளிடம் அவ்வதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Post

Post Comment