ஒபாமாவை பதற்றத்துடன் பேட்டி கண்ட பிரிட்டன் இளவரசர்

Prince-Harry-interviewed-the-former-d-former-US-Presidentபிரிட்டன் நாட்டின் பிரபல ஒலி – ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி. குழுமத்துக்கு சொந்தமான பி.பி.சி.ரேடியோ 4 – அலைவரிசைக்காக பிரிட்டன் நாட்டின் வேல்ஸ் இளவரசர் ஹாரி கவுர நேர்காணலாளராக செயல்பட்டார்.
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமாவை நேர்காணல் செய்யும் பொறுப்பு இளவரசர் ஹாரிக்கு வழங்கப்பட்டது.
இந்த நேர்காணலின் ஒரு பகுதியை இளவரசர் ஹாரியின் கென்சிங்டன் பேலஸ் தற்போது வெளியிட்டுள்ளது.  வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பதிவில் அமெரிக்க அதிபர் பதவிக் காலத்தின் கடைசி நாளில் ஒபாமாவின் மனநிலை, ஓய்வுக்கு பிந்தைய அவரது எதிர்கால திட்டம் போன்றவற்றைப் பற்றி ஒபாமா மனம் திறந்துள்ளார்.
முன்னதாக, தன்னை பேட்டி காணவந்த ஹாரியிடம் ’நான் பொறுமையாக பேசக் கூடியவன். இந்த பேட்டிக்காக வேகமாக பேச வேண்டுமா? என்று ஒபாமா கேட்க – அதற்கான அவசியமில்லை என ஹாரி கூறுகிறார். பிரிட்டன் நாட்டு ஆங்கிலத்தின் சாயலில் நான் பேச வேண்டுமா? என சிரித்தபடி ஒபாமா கேட்க ஹாரிஸ் பதற்றத்துடன் சமாளிக்கும் காட்சி இந்த முன்னோட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பிரிட்டன் நாட்டு அரச குடும்பத்தாருடன் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் மகனான ஹாரிஸ் திருமண நிச்சயதார்த்தத்தின்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா வாழ்த்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஒபாமாவின் பேட்டி வரும் 27-ம் தேதி பி.பி.சி.ரேடியோ 4 – அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என தெரிகிறது.

Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *