ஒமர் காதருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதை பெரும்பான்மையான கனேடியர்கள் எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது

omarkhadr_1280

அவருக்கு 10.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டமையை பெரும்பாலான தாராளவாதிகளும் புதிய ஜனநாயகவாதிகளும் 91 வீதமான பழமைவாதிகளும் தவறு என நினைக்கின்றனர்.

Angus Reid நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின் படி, பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஒமர் காதருக்கு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மானித்தமை தவறான தெரிவு என மூன்றில் இரண்டு வீதமான கனேடியர்கள் கருதுகின்றனர்.

கருத்துக்கணிப்பில் தாராளவாதிகளும் புதிய ஜனநாயகவாதிகளும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கின்ற அதேவேளை, முந்தைய கருத்துக்கணிப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், காதர் மீதான பார்வை கடந்த தசாப்தத்தில் கடுமையாகியுள்ளது. அதனால் அவர் சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார்.

குவான்டனாமோ வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவச் சிறையில் காதர் சித்திரவதைகளுக்கு உள்ளானமையில் அரசாங்கத்தின் பங்களிப்பிற்காக மன்னிப்புக் கோரி, அவருக்கு நிதி இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜூலை 7 – 10 ஆம் திகதிகளுக்கு இடையில் Angus Reid நிறுவனத்தால் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருந்தது.

71 சதவிகிதமானவர்கள் அரசாங்கம் தவறான காரியத்தைச் செய்து விட்டதென ஏற்றுக்கொள்வதாக பதிலளித்துள்ளனர். மேலும், காதர் நீதிமன்றத்தில் அவருடைய சிவில் உரிமைகள் மீறப்பட்டமைக்கு எதிராக 20 மில்லியன் டொலர்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரி வழக்குத் தொடுத்துள்ள நிலையில், அவர் நீதிமன்றிலேயே தனது போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

29 வீதமானவர்கள் மாத்திரமே அரசாங்கம் செய்தது சரியென நம்புகின்றனர், மன்னிப்புக்கோரி இழப்பீடு வழங்குவதைத் தவிர ட்ரூடோவிற்கு வேறு தெரிவு இல்லை என 35 வீதமானவர்கள் நம்புகின்றனர்.

அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளாத நிலை ட்ரூடோவின் ஆதரவாளர்கள் வரை நீண்டிருக்கிறது: 2015 ஆம் ஆண்டில் தாராளவாதிகளுக்கு வாக்களித்ததாகக்கூறிய 61 வீதமான கனேடியர்கள் தவறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். அக்கருத்து புதிய ஜனநாயகவாதிகளின் வாக்காளர்களில் 64 வீதமாக அதிகரித்துள்ளது.

பழமைவாதிகளே அதிகம் எதிர்க்கின்றனர்

பழமைவாதிகள் மத்தியிலேயே எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளனர், அவர்களில் 9 வீதமானவர்களே சரியான தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.  69 வீதமான பழமைவாதிகளின் வாக்காளர்கள் காதருக்கு எதையும் வழங்க விரும்பவில்லை என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இது ஒப்பீட்டளவில் தாராளவாதிகளையும் புதிய ஜனநாயகவாதிகளையும் விட மூன்றில் ஒரு பங்கிலும் குறைவு.

அந்த இரண்டு கட்சிகளினதும் ஆதரவாளர்களில் 40 வீதத்துக்கும் சற்றுக் குறைவானவர்கள், தாம் அரசாங்கத்துடன் இருந்திருந்தால் காதரிடம் மன்னிப்பு கோரி, இழப்பீடு வழங்கியிருப்பார்கள். அதே வேளை, 27 முதல் 30 வீதமானோர் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்.

தேசிய அளவில், 29 சதவிகித கனேடியர்கள் காதருக்கு மன்னிப்பும் இழப்பீடும் வழங்கியிருப்பார்கள், 25 சதவிகிதத்தினர் மட்டுமே மன்னிப்புக் கேட்டிருப்பார்கள். 43 வீதமானவர்கள் அவருக்கு எதனையும் வழங்கியிருக்க மாட்டார்கள்.

நீண்டு-நிலைத்துள்ள, கடினமான கருத்துக்கள்

குறிப்பிடத்தக்க அளவு கனேடியர்களுக்கு காதர் மீது சிறிய அளவான அனுதாபம் இருப்பது புதிதல்ல. ஜூலை 2008 இல், Ipsos-Reid நடத்திய கருத்துக்கணிப்பில் 60 வீதமான கனேடியர்கள், காதர் அமெரிக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பியதாகவும் எஞ்சிய 40 வீதமானவர்கள் அவர் மீண்டும் கனடாவிற்குக் கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் என நம்புவதாகவும் தெரிய வந்தது.

2009 ஜனவரியில், Nanos நடத்திய ஆய்வில், 45 வீதமான கனேடியர்களுக்கு காதர் மீது அனுதாபம் இல்லை என கண்டறியப்பட்டது – அதே எண்ணிக்கையிலான கனேடியர்கள் காதருக்கு இழப்பீடோ மன்னிப்போ வழங்க விரும்பவில்லை என ARI கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.

2015 மே மாதத்தில், அல்பெர்ட்டா சிறையிலிருந்து காதர் பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிது நாட்களில் Forum Research நடத்திய கருத்துக்கணிப்பில், 34 வீதமான கனேடியர்கள் காதர் மீது சாதகமற்ற பார்வையைக் கொண்டிருந்ததாகவும், 20 வீதமானவர்கள் சாதகமான பார்வையைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இங்கே மீண்டும், குறிப்பிடத்தக்க அளவான பிளவு உள்ளது. 61 வீதமான பழமைவாதிகள் சாதகமற்ற பார்வையைக் கொண்டிருந்தனர், தாராளவாதிகள் வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தனர்.

சாத்தியமான அச்சுறுத்தல் ஒன்றையே அநேகர் காண்கின்றர்

காதர் ”ஒரு தீவிரவாத அச்சுறுத்தல்” என நம்புபவர்களின் எண்ணிக்கை, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து அதிகரித்தமை ARI இன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அந்த எண்ணிக்கை 2 வருடங்களுக்கு முன்னதாக 55 வீதமாக இருந்தது, ஆனால் தற்போது 64 வீதமாக அதிகரித்துள்ளது இதில் இலேசான பெரும்பான்மை தாராளவாதிகள், புதிய ஜனநாயகவாதிகள், 83 வீதமான பழமைவாதிகள் ஆகியோர் அடங்குவர்.

காதருக்கு இழப்பீடு வழங்குவதாக ட்ரூடோ மேற்கொண்ட தீர்மானம் தொடர்பிலான பழமைவாதக் கட்சித் தலைவர் அன்ட்ரூ ஷியரின் கடுமையான விமர்சனம் பொதுமக்களின் கருத்துக்களுடன் ஒத்திருக்கிறது. இதில் அவருடைய ஆதரவாளர்களும் பரந்தளவான மக்களும் உள்ளடங்குகிறார்கள்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையுடன் கனேடியர்கள் உடன்படவில்லை என்பதுடன், இந்த விவகாரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.

ARI கருத்துக்கணிப்பின் படி, காதர் அமெரிக்கப் படையினரால் பிடிக்கப்பட்ட போது, அவர் 15 வயதான ஒரு குழந்தைப் போராளி என்பதையும் அவரைத்தான் எல்லாவற்றுக்கும் முதலில் கையாண்டிருக்க வேண்டும் என்பதையும் 74 வீதமான கனேடியரகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *