தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”

ஓர் இனத்தின் அடையாளம் மொழியே. தமிழர்கள் நாம் என்றால் நாம் தமிழை பேசவேண்டும். வெறுமனே வேட்டியை கட்டுவதாலோ புடவையை உடுத்துவதாலோ நாம் தமிழராகிவிட முடியாது. எங்கள் சந்ததிகள் தமிழை பயிலவேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தபோது கல்விச் சபையால் பல வகுப்புக்களை உருவாக்கி அதற்கான தமிழ் ஆசிரியர்களை நியமித்தது. ஆனால் இன்று அந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் போதாததால் வகுப்புக்கள் மூடப்பட்டு வருகின்றது.
எமது எதிர்காலச் சந்ததியில் எத்தனை வீதம் தமிழை பேசுமோ தெரியாது. அனால் தமிழ்தான் உலகின் மூத்த மொழி. பல மொழிகளுக்கு தாயாக இருந்த மொழி. மிகவும் வளம் மிக்க மொழி. செம்மொழிகள் ஏழில் எல்லாத் தகமைகளையும் பூர்த்தி செய்யும் மொழி தமிழ்மொழி ஒன்றே என எமது வருங்கால சந்ததி அறியும்போது அதைப்பற்றி தேட ஆரம்பிக்கலாம். ஆராய்ச்சி செய்யலாம். அப்போது அதற்கான மூலவள மையம் ஒன்று இருக்கவேண்டும். எம் மொழி பற்றிய ஆவணங்கள் இருக்கவேண்டும். அதை இன்றைய சந்ததி உருவாக்கி வைக்காவிட்டால் அது எப்போதுமே உருவாகப் போவதில்லை.
அந்த வகையிலே உலகப் பிரசித்தி பெற்ற ரொறன்ரோ பல்கலைக் கழகத்திலே உருவாக இருக்கும் தமிழ் இருக்கை தமிழர்களுக்கோர் அரிய சொத்தாகும். அதை உருவாக்குவதற்கு 3 மில்லியன் டொலர்களை தமிழ் சமூகம் வைப்பிலிடவேண்டும். 3 இலடசம் தமிழர்கள் கனடாவில் இருக்கின்றோம் . ஆளுக்கு 10 டொலர் போட்டால் போதும். இது இலகுவாக முடிந்து விடும்
கடந்த 18 வருடங்களாக இசையரங்கம் மேடையேற்றும் இசைக்கு ஏது எல்லை என்ற நிகழ்வை பலர் அறியாதிருக்கலாம்.  தமிழில் இசைவேண்டும். ஈழத் தமிழர்க்கோர் இசைப் பாரம்பரியம் வேண்டும். கனடாவில் இசைபயிலும் மாணவர்கள் இலக்கணத்தை பயின்ற பின் இலக்கியம் படைப்பதற்கு களம் வேண்டும் என்ற நோக்கில் இசையரங்கம் பயணிப்பதை புரிந்தவர்கள் சிலரே. அப்படியாக தமிழுக்காக உழைக்கும் இசையரங்கம் தமிழ் இருக்கை அமைப்பதில் பங்காளியாகிறது. ஆம் இசையரங்கத்தில் பாடப்பட்ட பாடல்களோடு எமது இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இசைத்தட்டுகளிலிருந்தும் சில பாடல்களை தெரிவுசெய்து முற்றத்து மல்லிகை என ஓர் இசை நிகழ்வை நடத்தி தமிழ் இருக்கை அமைப்பதற்கு நிதி சேகரிக்கின்றது. ரொறன்ரோவின் தலைசிறந்த பாடகர்கள் அனைவரையும் இந்த மேடையில் காணலாம். 20 பாடகர்கள் பாடுகிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதால் மூன்று முக்கியமான பணிகளை செய்தவர்களாவீர்கள்
1.    வருங்கால சந்ததி தான் யார் என அறிய முற்படுகையில் அதற்கான ஆய்வினை நடத்தவோ மேற்படிப்பை தொடர்வதற்கோ தேவையான பேராசிரியரின் வழிநடத்தல், நூலகம் என்பன அமைக்க உதவியவராவீர்கள்
2.    இலங்கையிலோ இந்தியாவிலோ நிறுவமுடியாத தமிழ் ஆவணக் காப்பகத்தை அடுத்ததாக செறிந்து வாழும் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் நிறுவலாம்.
3.    எமது கவிஞர்களின் வரிகளுக்கு எமது கலைஞர்கள் மெட்டமைக்க எமது பாடகர்கள் பாடும் இசை நிகழ்விற்கு பேராதரவை வழங்குதல்.
ஆகவே தமிழ் மக்களே டிசம்பர் 1ம் திகதி நடைபெறும் முற்றத்து மல்லிகை நிநழ்விற்கு திரண்டு வாருங்கள். உங்கள் பங்களிப்போடு தமிழிருக்கையை உருவாக்குவோம்.

Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *