தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?

கனடா – மட்டக்களப்பு நட்பு பண்ணை உருவாக்கத்திற்கென 2016 ம் ஆண்டு கனேடிய தமிழர் பேரவை ( CTC ) சேகரித்த நிதிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கனடாவிற்கு வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து  கருத்து வெளியிட்டுள்ளார்.

2016ம்ஆண்டு கனடாவிற்கு வருகை தான் வருகை தந்த போது கனேடியத் தமிழர் பேரவை கனடா – மட்டக்களப்பு நட்பு பண்ணை உருவாக்குதவற்கான நிதி சேர நடைபவனி ஒன்றை நடத்தியதாகவும் அதனை தொடர்ந்து பல சந்திப்புகளை இது தொடர்பில் நடத்தியிருந்தாகவும் அவர் கூறினார்.

இந்த நிதி சேர நடைபவனி மற்றும் சந்திப்புகளி் மூலமாக திரட்டப்பட்ட 80,000 டொலர்களுக்கும் அதிகமான நிதித் தொகை இதுவரை அந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பண்ணைய ஒருவாக்க விரும்பியதாகவும் இதன் ஓடாக அந்த பகுதிமக்களுக்கு நன்மை ஏற்படுத்த முடியும் என்று தான் நம்பியதாகவும் எனினும் அந்த முயற்சி இதுவரை கை கூடவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தன்னை முன்னிலைப்படுத்தி தாயகத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கென சேகரிக்கப்பட்ட நிதி மூன்று வருடங்களாக அந்த கனேடியத் தமிழர் பேரவையினால் பயன்படுத்தப்படாதமை குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டதிற்கு சேகரிக்கப்பட்ட நிதியில் எந்த ஒரு சிறு தொகையினையும் தனக்கு கனேடியத் தமிழர் பேரவை அனுப்பவில்லை என்பதை தான் இந்த நிதி உதவியை வழங்கிய கனேடிய மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தாயக மக்களிற்கு உதவி செய்வதற்கென சேகரிக்கப்பட்ட இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை கனேடியத் தமிழர் பேரவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாயக மக்களுக்கென நிதியினை சேகரித்து விட்டு அதனை அங்குள்ள மக்களுக்குரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனுப்பாமல் மூன்று ஆண்டுகள் வரை காலதாமதப்படுத்துவது கடும் விசனத்தையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போது அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடித்து காலம் கடத்துவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தம்மால் உறுதியளித்த திட்டங்களை முன்னெடுக்க முடியாவிட்டால் அது குறித்து வெளிப்படையாக அறிவித்து சேகரிக்கப்பட்ட நிதியை அதனை வழங்கிய  மக்களுக்கு மீளக் கையளிப்பதே அந்த அமைப்பின் பொறுப்பாகும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாயக மக்களுக்கென CTC  சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக வட்டிக்கு விடப்படுகின்றதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

தமது அமைப்பின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளுக்கு எதிராக எச்சரைிக்கை கடிதங்களை அனுப்புவதற்கு  தாயக மக்களுக்கென சேகரிக்கப்படும் நிதியினை  அந்த அமைப்பு பயன்படுத்துகின்றதா  என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.https://www.facebook.com/perinpam.kandiahsinn/videos/2114061561986004/

Video by thedipar


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *