World

 
 

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி

சீனாவின் பீஜிங்கை  சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார். மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்–மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வக்கீல் வாரிஸ் அலி ஜான்ஜூவா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை நீதிபதி சையத்Read More


அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் அரசாங்கம் மிகவும் திடமாகவே உள்ளது என அந்நாட்டு பிரதமர் எத்துவா பிலிப் தெரிவித்துள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று(வியாழக்கிழமை) இரவு வழங்கியுள்ள விசேட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ‘ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் தங்கள் உரிமைக்காக போராட வரவில்லை. மாறாக, பொலிஸாருடன் மோதவும், சேதம் விளைவிக்கவும் மட்டுமே வருகின்றனர்!’ எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறை தொடர்பிலான பல்வேறு தரவுகள் எம்மிடம் உள்ளன. அதில் பலர் வன்முறைகளை மனதில் கொண்டு மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் எனவும் எத்துவா பிலிப் சாடியுள்ளார். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளிடம் சிக்கி கோழி இறைச்சி போன்று வாட்டப்படுகின்றார்கள். இதுபோன்ற பிரான்ஸை நாம் பார்க்க விரும்பவில்லை. அரசு மிக திடமாகவும், நிலைப்பாட்டில் உறுதியாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவி விலகும் எண்ணம் உள்ளதா என கேட்கப்பட்டRead More


சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு

சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.  மேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர்.


அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக போர் இருந்து வந்தது. அமெரிக்க அரசு சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது. இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதிRead More


ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்

ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விபத்துக்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துச் சம்பவம் பற்றி கூறியதாவது:- “ தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படைRead More


இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.


மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை

முதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைRead More


போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்

பல வாரங்களாக பிரான்சில் நடைபெற்றுவந்த போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருள் வரி உயர்வை நிறுத்திவைப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்பேரில் பிரதமர் எடுவார்ட் பிலிப்பே எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சமரசம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் ஆடை போராட்டம் தற்போது அரசாங்கத்தின் மீது பரவலான கோபத்தை பிரதிபலிப்பவையாகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரானவையாகவும் வளர்ந்துள்ளன. அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து நால்வர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முக்கிய கொள்கையை பிரெஞ்சு ஜனாதிபதி நிறுத்துவது இதுவே முதல்முறையாகும். பிரான்சில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியில் தற்போது எரிபொருள் வரி உயர்வை நிறுத்துவதற்கு மக்ரோனின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.


ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்

நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1954ம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய மதம் தொடர்பான கடிதம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.இந்த கடிதம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடி) மதிப்பில் ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. God letter என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கடிதம், அறிவியல் மற்றும் மதம் தொடர்பான விவாதத்தை அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.