will-it-happen

 
 

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி

சீனாவின் பீஜிங்கை  சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார். மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


91 வயது மூதாட்டியை காதலித்து வரும் 31 வயது இளைஞன்

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயதான மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் இதுபோன்று வினோதமான காதலர்களை வௌிக்கொணர்கின்றனர். அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடியாக கைல் ஜோன்ஸ் (31) – மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர். இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர். இவர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் ஔிப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றன. இதுபற்றி ஜோன்ஸ் கூறுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் உறவு கொண்டுள்ளேன். ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போலRead More


தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம் – மனைவிகளை, 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்

தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம், பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 300 ஜோடிகள் கலந்து கொண்டனர். போட்டியின் விதிப்படி தங்களது திருமண உடையில் அணிவகுத்த தம்பதியினர், சுமார் 3 கிலோ மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டனர். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரம் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும். இதில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு தேன் நிலவுக்கான சுமார் 42 லட்சம் மதிப்பிலான பரிசுத் கூப்பன் வழங்கப்பட்டது.


3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வெடித்த வாலிபர்

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.


சீனா முதல் முறையாக 20 வகை நாய்களை குளோனிங் செய்து வெற்றி – அடுத்தது மனிதன்?

சீனா ஆய்வகத்தில் 12 வயது ஸ்க்னாசர் இன நாயின் குட்டிகளை குளோனிங் முறையில் செய்து உள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த செயல்முறை ஸ்க்னாசர் நாயில் இருந்து தோல் மாதிரிகளை எடுத்து மற்றும் செல்கள் குளோங்கில் ஈடுபடுத்தப்பட்டது. நாய் உரிமையாளர் யார் வாங் யிங்கிங் குளோனிங் குட்டிகளின் தந்தை படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். சீனாவில் முதல் குளோங் செய்யப்பட்ட நாய் 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நடைமுறையில் இருந்து பெரிய சவால்களை கண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் குளோனிங் தொழில்நுட்பம் மூலம் சீன வல்லுநர்கள் ஆய்வகத்தில் நாய்களின் 20 வெவ்வேறு இனங்களைப் உருவாக்க அனுமதி சீனா அளித்துள்ளது. ஆனால் குளோனிங் அதே டி.என்.ஏ யின் விலங்குகளை உற்பத்தி செய்யும் போது அது அதே மனநிலையுடன் இருக்காது என்றுRead More


ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்

அமெரிக்காவின் லொவா மாநிலத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகளான ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ் ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. இதனை விசித்திரமாகக் கொண்டாட விரும்பிய அவர்கள் வெர்னான் என்ற குன்றுப் பகுதிக்குச் சென்றனர்.தொடர்ந்து தங்களது திருமண ஆடையில் தீ வைக்குமாறு கணவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்களும் சம்மதிக்கவே, ஆடையில் பற்றி எரியும் தீயைப் பற்றிக் கவலைப்படாமல் இருவரும் போஸ் கொடுத்தனர். அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும், இருவரும் ஆனந்தமாக கொண்டாடினர்.


6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷனல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும்.  புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான உணவகத்தில் ஆண்டுக்கு ரூ 42 ஆயிரம்   வரையிலும் உணவு உட்கொள்ளலாம் என்றும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கிரேசி இண்டெர்நேஷ்னல் நிறுவனத்தினர், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் 92 சதவீதம் பேர் இரவு சரியாக தூங்குவதில்லை. அதிகமானோர் செல்போனில் மூழ்கி தூக்கத்தை இழப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.Read More


புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்

உத்தர பிரதேசத்தில், தன் மீதான பாலியல் புகாரை பொய் என நிரூபிக்க, தனக்கு தானே பிறப்பு உறுப்பை அறுத்த, இளம் சாமியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பாம்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், மதானி பாபா, 28. தன்னை தானே சாமியாராக அறிவித்த மதானி, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே, ஆசிரமம் கட்டுவதற்காக முயற்சித்தார்.இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் வயப்பட்டதாகவும், அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதானி பாபா மீது, அப்பகுதியை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, தன் மீதான புகார் பொய்யானது என நிரூபிக்க, மதானி பாபா, தன் பிறப்புறுப்பை தானே அறுத்தார். அதிக ரத்தப்போக்கால் மயக்கமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, சவுதி அரசு குறித்து விமர்சனம் செய்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தனது திருமணத்தை முன்னிட்டு சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கசோகி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரசிடம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். கசோகி கொல்லப்பட்டதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் துருக்கி அரசு தெரிவித்தது. அவர் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்த சவுதி அரசு, விசாரணையின் போது தவறுதலாக கசோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்றுRead More


நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி

ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும் தண்டனை தான் என அந்த பாட்டி கூறியுள்ளார். என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நாள் என்றால், நான் முதலில் என் வீட்டிற்குள் நுழைந்த நாள் தான். உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டை சார்ந்த ஜெனனி காலெம்ட். இவர் தான் உலகின் மிக நீண்ட  நாள்  வாழ்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு 122 வயதில் இறந்தார்.