Technology

 
 

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தகவல்

குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. 2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும்Read More


டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவருக்கு பதில் வேறு படம் ஹேக்கர்கள் கைவரிசை

அமெரிக்காவின் 45-வது அதிபராக  2017-ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதிபர்  தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற கிளாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கபட்ட போது  இவர் வெற்றி பெற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார். அதன் பின் இவர் எது செய்தாலும், சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவும் யோசிக்காமல்   எடுப்பதால், அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்து விடுகிறது. இதனால் பலரும் டிரம்ப் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆப்பிள் போனில் இருக்கும் சிரி ஆப்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பற்றி கேட்ட போது, அவருடைய விக்கிப்பிடியாவில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, மிகவும் அசிங்கமான புகைப்படம் வந்துள்ளது. இது ஹேக்கர்களின் வேலையாகத் தான் இருக்கும் எனவும், கடந்த வியாழக்கிழமை பார்த்த அனைவருக்கும் இந்த புகைப்படம் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More


சந்திராயன் – 2 செயற்கைக்கோளை ஜனவரியில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த புதன்கிழமை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதேபோல அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் உள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பாலியல் புகார்- கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்

பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தி தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர். இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் 2014 ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ,கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு 90 மில்லியன்Read More


827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு

உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. உத்தர்காண்ட் ஐகோர்ட், செப்டம்பர் 27 அன்று 850 ஆபாச இணையதளங்களை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பெற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(Meity) நடத்திய ஆய்வில், 30 இணையதளங்களில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய, மத்திய தகவல் தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தொலைதொடர்பு துறை பிறப்பித்த உத்தரவு: உத்தரகாண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், Meityயின் வழிமுறைகளின்படி, 827 ஆபாச இணையதளங்களையும் இணையதள சேவை நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு

இந்தியாவில் முதல் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இடம்பெறாத லாவா, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியில், நொய்டாவில்   இரண்டு தொழிற்சாலைகளை தொடங்குகிறது.  லாவா தொழிற்சாலையில்  3,500 பேர் வேலை செய்கிறார்கள். சீனாவில் இருந்து ஃபோன்கள் இறக்குமதி செய்ய லாவா பயன்படுத்தப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் லாவாவுக்கு அடுத்தபடியாக, சாம்சங், ஓப்போ, ஸியோமி, ஃபாக்ஸ் கான் ஆகிய செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொபைல் போன் துறையில்  120 தொழிற்சாலைகள் மூலம்  4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு பொருட்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது செல்போன்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது.


யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி

‘காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது’ என்ற பழமொழியை எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் நாம் மறந்து வருகிறோம். எழுந்தவுடன் கண் விழிப்பதே செல்போனில் தான் என்றாகிவிட்டது. நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போன் பார்ப்பதால் நம்மையும் அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிறோம். இதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம்Read More


பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’

துபாயில் நடந்து வரும் ‘ஜிடெக்ஸ்’ தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றுள்ள சோபியா ‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனித வடிவில், மனிதர்களின் செயல்பாடுகளைசெய்வது போன்று ‘ரோபோட் டிக்ஸ்’ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘ரோபோ’ சோபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ‘ரோபோ’வானது டேவிட் ஹான்சன் என்பவருக்கு சொந்த மானஹான் சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங் காங் நாட்டுநிறுவனம் தயாரித் துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உருவாக்கப்பட்ட சோபியா ‘ரோபோ’வுக்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த ‘ரோபோ’ சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பேசி, தானே முடிவு எடுக்கும் திறன்கொண்டது. இந்த ‘ரோபோ’ மனிதர்களை போலவே வாயசைவுடன் பேசும் திறன் வாய்ந்தது. அதாவது சோபியா ‘ரோபோ’வுடன் தொடர்ந்து 1 மணி நேரம் உரையாட முடியும். கேள்விகள்Read More


பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக், கடந்த  2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் கடும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க் சூகர்பெர்க்கை நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர். சில முறைகேடுகளை பேஸ்புக் முறையாக கையளவில்லை என கூறி மார்க்சூகர்பெர்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 2019-Read More


50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு

மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2016 செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன. ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது எனசுப்ரீம் கோர்ட் தடைRead More