Tamil Nadu

 
 

சோனியா மருமகன் அலுவலகத்தில் அமலாக்கதுறை ரெய்டு

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பிரியங்காவின் கணவர் ராபர்ட்வாத்ரா. இவர் மீது ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது தொடர்பாக வழக்குகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். சமீபத்தில் நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாத்ராவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.


விஜய் மல்லையா மனு – அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல மதுபான நிறுவன தொழிலதிபரான, விஜய் மல்லையா, கடன் மோசடி செய்ததாக, பல வங்கிகள், வழக்குகள் தொடர்ந்தன. இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்ற வாளி என அறிவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை, அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியும். இந்த மனுவை எதிர்த்து, மல்லையா தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டும்,Read More


புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

மத்திய அரசின் தலைமைப்பொருளாதார அலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு மே மாதம் வரையில் இருந்த போதிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து காலியாக இருந்த தலைமைப்பொருளாதார ஆலோசகர் பதவிக்கு சிறந்த பொருளாதார வல்லுனர்கள் பெயரை மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது. உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஐதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பெயரும் முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்திRead More


பட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்

அகமத்நகரில் நடைபெற்ற விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட நிதின் கட்காரி மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மேடையில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் பிடித்துக் கொண்டார். மேடையில் பேசிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார். பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்ட போது மயக்கமடைந்தார். உடனடியாக நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் ஷீரடிக்கு புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையே அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “சர்க்கரையின் அளவு குறைந்தது காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். என்னை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னுடைய நலம் விரும்பிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, அவர் அடைக்கப்பட்டுள்ளRead More


விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது – பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கையான பேரழிவுகள், விளைப்பொருட்களுக்கு போதிய விலையின்மை, கூலி மற்றும் ஈடுப்பொருட்களுக்கான விலை உயர்வு காரணமாக விவசாயிகள் கடினமான நிலையை எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராடி வருகிறார்கள். மத்திய அரசு இவ்விவகாரத்தில் இணங்க மறுக்கிறது, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கிறது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தரமான தீர்வாகாது என பா.ஜனதா விவசாயத்துறை தலைவர் கூறியுள்ளார். விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் பா.ஜனதா விவசாயத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜனதா விவசாயப்பிரிவு தலைவர் விரேந்திர சிங் மாஸ்த் பேசுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வேன். கடந்த வாரம் பேரணியில் கலந்துக் கொண்ட பல்வேறு விவசாயRead More


புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்

புதுச்சேரியில், மூன்று பேரை எம்.எல்.ஏ., க்களாக நியமனம் செய்தது செல்லும் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை எனவும் கூறியுள்ளது. புதுச்சேரி சட்டசபைக்கு, மாநில அரசின் பரிந்துரை இன்றி, 3 நியமன எம்.எல்.ஏ., க்களை மத்திய அரசு நியமனம் செய்தது. பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ., க்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நிமயன எம்.எல்.ஏ., க்களை அங்கீகரிக்க மறுத்து விட்டார். அவர்களுக்கு சம்பளம், சலுகைகளும் வழங்கப்படவில்லை. நியமனத்தை ரத்து செய்யக் கோரி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.  இந்தRead More


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம்  கூறியதாவது:- தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  கூறி உள்ளது.


காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு. மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது. மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது. திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது?  என கேள்வி எழுப்பினார். எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என காவிரி, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி எல்லாம் சிதறி விடும்Read More


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.