srilanka

 
 

இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு

நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டுRead More


அதிகார ஆசையை மறைக்க, புது அரசியலமைப்பை மஹிந்த காரணமாக காட்டுகிறார்

 புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, வாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்னார். நான் வேண்டாம் என்றேன். இரண்டாம் முறையும் வந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டேன். எங்கள் மீதான வழக்குகளை தடுக்கவே நான் பதவியை கைப்பற்றினேன் என இன்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை என மகிந்த கூறுவதுதான் உண்மை இல்லை. இரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்ன போது அதை நான் ஏற்றுகொண்டதன்Read More


காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற விஷேட வழக்கொன்றில் ஆஜராகியுள்ளதால் இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு அவர்களின் கணிஷ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வழக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில்Read More


இன்று இரவு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. இன்று இரவு 07.00 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட உள்ளது.


பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் தடை விதிக்கப்பட்டதாலே நெருக்கடி நிலை

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டதாலேயே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் நிலமை மற்றும் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


ஜனாதிபதிக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்வது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை

ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனின் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவரை முன்வைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய அரசியல் சிக்கலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்வு ஒன்றிற்கு வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.


“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார். இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம்Read More


தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு சபாநாயகர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு அதிகாரம் இருப்பதாக மாயை ஒன்றை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்களுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியினர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளுக்கு அழுத்துங்களை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டுமென்றார்.


ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்போது மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசியலமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக பாராளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நீதிமன்றில் கூறியள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதானRead More


பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் கலந்துரையாடி தீர்வொன்று எட்டவுள்ளதாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். கடந்த மாதங்களில் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. எனினும் கடந்த நவம்பர் மாதம் மூன்று தடவைகள் எருபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு தடவையே குறைக்கப்பட்டதுடன், அதுவும் இரண்டு சதவீதத்தால் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.