Rathika Sitsabaiesan

 
 

அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்

மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாக மைத்திரி மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் இந்நிலையில், தனக்கான ஆதரவைப்பெறும் நோக்குடன் இரவு பகலாக கட்சிகளுக்கும் வலை வீசியபடியுள்ளார் மகிந்த. தனது பலத்தை காண்பிப்பதற்கு ஏதுவாக மைத்திரி ஒத்திவைத்து தந்துள்ள நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முதல் எப்படியாவது தனக்குரிய ஆதரவை உருவியெடுத்து விடவேண்டும் என்று பல்வேறு வகையிலான குத்துக்கரணங்களையும் அடித்துக்கொண்டிருக்கிறார் மகிந்த. மறுபுறத்தில், அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மைத்திரி – மகிந்த தரப்பின் மீதான “அடுத்த கட்ட” அழுத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது. தங்களது இரகசிய தூதுவர்களின் மூலம் மைத்திரி தரப்பினைRead More


இலத்திரனியல் வாக்குப்பதிவு முறை இல்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை நடத்தாதிருக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார். இன்று காலை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன்படி இதன்போது திறந்த அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது

சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரி, இப்பிரதேசத்திலுள்ள ஒரு அரசியல்வாதியென அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் சைட்டம் நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்னவிடமும் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக மேலும் அத்தகவல்கள் கூறியுள்ளன.


வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிக பெண்மணியை மீட்ட பொலிசார்

வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 நாட்களாக தனிமையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வயதான பெண்மணியை வவுனியா பொலிசாரால் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த வீட்டின் முன் வாயிற் கதவுகள் பூட்டப்பட்டிருந்துள்ளது. அந்த வீட்டில் வசிக்கும் முதிய தாயாரை பூட்டபட்ட வீட்டு வளவுக்குள் கண்ட அயல் வீட்டுக்காரர் அவ்வப்போது வாயிற்கதவு ஊடாக உணவினை வழங்கியிருந்தனர். நேற்றைய தினத்தில் இருந்து வீட்டில் குறித்த தாயாரின் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வவுனியா பொலிஸ்க்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ண விஜயமுனி தலைமையிலான குழுவினர் வீட்டு மதில் ஊடாக உள்நுழைந்து, வீட்டின் கதவைத் திறந்து,Read More


விரைவில் ஸ்காபுறோ ரூஜ்ரீவர் தொகுதியில் வருகிறது இடைத்தேர்தல் !! ராதிகா சிற்சபைஈசன் , மற்றும் பிரகால் திரு ஆகியவர்கள் போட்டி ekuruvi Night

ஸ்காபுறோ ரூஜ்ரீவர் தொகுதியிலிருந்து ஒன்டாரியோ சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லிபரல் கட்சி பேரவை உறுப்பினர் பாஸ் பல்கிசூன் திடிரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதற்காக இந்த பதவி விலகல் என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. நேற்று றொப் போர்ட் திடிரென காலமானது மற்றும் அது தொடர்பான பிற பணிகளில் குயின்ச்பார்க்கில் அனைவரும் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த போது இந்த பாஸ் பல்கிசூன் ராஜினாமா செய்த விடயத்தை முதல்வர் காத்லீன் வெய்ன் அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக தலைமையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்னும் 6 மாதங்களுக்குள் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என முதல்வர் காத்லீன் அறிவித்துள்ளது இவரகாத்தான் ராஜினாமா செய்தாரா என்பது உள்ளிட்ட சில சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. சிட்டி கவுன்சில் உட்பட பல அரசியல் பதவிகளை வகித்த பாஸ் பல்கிசூன் இதற்கு முன்னரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததும்,Read More