Medical

 
 

மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை

முதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைRead More


பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தைக்கால் காலனித் தெருவை சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்தராஜ் என்பவர், தனது மனைவி கார்த்திகாவின்  இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற கார்த்திகா, வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது பிரசவத்தின்போது, தவறுதலாக வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்தது தெரிய வந்துள்ளது. அதன்பின்னர், அறுவை சிகிச்சை மூலம் கையுறை அகற்றப்பட்டது. எனினும், தற்போது கார்த்திகா மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கார்த்திகாவின் கணவர் ஆனந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார்.


சீனா முதல் முறையாக 20 வகை நாய்களை குளோனிங் செய்து வெற்றி – அடுத்தது மனிதன்?

சீனா ஆய்வகத்தில் 12 வயது ஸ்க்னாசர் இன நாயின் குட்டிகளை குளோனிங் முறையில் செய்து உள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த செயல்முறை ஸ்க்னாசர் நாயில் இருந்து தோல் மாதிரிகளை எடுத்து மற்றும் செல்கள் குளோங்கில் ஈடுபடுத்தப்பட்டது. நாய் உரிமையாளர் யார் வாங் யிங்கிங் குளோனிங் குட்டிகளின் தந்தை படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். சீனாவில் முதல் குளோங் செய்யப்பட்ட நாய் 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நடைமுறையில் இருந்து பெரிய சவால்களை கண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் குளோனிங் தொழில்நுட்பம் மூலம் சீன வல்லுநர்கள் ஆய்வகத்தில் நாய்களின் 20 வெவ்வேறு இனங்களைப் உருவாக்க அனுமதி சீனா அளித்துள்ளது. ஆனால் குளோனிங் அதே டி.என்.ஏ யின் விலங்குகளை உற்பத்தி செய்யும் போது அது அதே மனநிலையுடன் இருக்காது என்றுRead More


இயற்கை முறையில் தலைவலியை குணமாக்கலாம்

உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதை விட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம். செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்புRead More


கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்துRead More


ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்

வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.  இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.Read More


கண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்

நம் உடலில் உள்ள உறுப்புகளில் கண்களின் பணி மிகவும் முக்கியமானது. கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள். மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும். குழந்தைகளுக்கு மாறுகண் தானாகவே சரியாகாது. அது அதிர்ஷ்டமும் அல்ல. தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை மற்றும் பயிற்சி இருந்தால் மாறுகண் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அலட்சியமாக இருந்தால் பார்வை பறிபோய் விடும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது. இறந்தவர்களின்Read More


காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?

காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள். இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.Read More


கொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்

உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. மலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்படRead More


மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஐ டச் மைசெல்ப்” பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். “ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார். “பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதேRead More