Featured Right

 
 

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா

தமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா. கடந்த வருடம் வீரேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்கள் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். அகம்பாவம் படத்தில் நடித்து வருகிறார். நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் ஜெயலலிதா. அவரை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றேன். அவருக்கு பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரை உண்மையாக பின்பற்றுபவராக இருந்து வருகிறேன். எந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும் நானும் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். அவர் விட்டுப் போன கனவுகளைRead More


மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை

முதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்துவது உண்டு. உயிரோடு இருக்கிற பெண்களின் கருப்பையை தானம் பெற்று, இப்படி பொருத்துவது இயல்பாக நடக்கிற ஒன்றுதான். பல தாய்மார்கள் கூட, தங்கள் மகள்களுக்கு இப்படி கருப்பை தானம் செய்திருக்கிறார்கள். அப்படி கருப்பை தானம் பெற்ற பெண்கள் குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் 32 வயதான ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அறுவை சிகிச்சைRead More


ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்

ரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த படமும் இவ்வளவு அதிக செலவில் தயாரானது இல்லை. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டனர். பாகுபலி, சர்க்கார் போன்ற முந்தைய படங்களின் சாதனையை முதல் வாரத்திலேயே ரஜினியின் படம் முறியடித்து விட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக பட நிறுவனமான லைகா அறிவித்தது. தற்போது வசூல் ரூ.500 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்ததால் இந்தியிலும் 2.0 வெளியாகி வட மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. சீனாவிலும் 2.0 படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்குள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனமான எச்.ஒய். மீடியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.Read More


‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை திரும்பி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ‘பார்க்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்தை, எவண்டா கீழ எவண்டா மேல எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையில் கேட்டு உள்ளனர். இதற்கிடையில், இந்த பாடலை படநிறுவனம் வெளியிடும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்குRead More


லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு கவர்ச்சி காட்டும் அமலாபால்

அமலாபால் நடித்து கடந்த வருடம் ‘வேலையில்லா பட்டதாரி–2’, ‘திருட்டுப்பயலே–2 ஆகிய படங்களும், இந்த வருடம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘ராட்சசன்’ படங்களும் திரைக்கு வந்தன. இதில் ராட்சசன் படம் வசூல் குவித்தது. இப்போது ஆடை, அதோ அந்த பறவை போல ஆகிய 2 தமிழ் படங்களிலும், அது ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். ‘ஆடை’ படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற அவரது தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. மீ டூவில் பாலியல் புகார் சொல்லியும் பட உலகை அதிர வைத்தார். மேலும் டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்த அவர் நடிகர் விஷ்ணுவிஷாலை 2–வது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. இருவரும்Read More


‘பேட்ட’ படத்தில் இளமை தோற்றம் – ரஜினியின் புதிய புகைப்படம் வெளியானது

ரஜினிகாந்தின் 2.0 திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்து பேட்ட மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. பேட்ட படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, நவாஜுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ் என்று நிறைய நட்சத்திரங்கள் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா மற்றும் சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ரஜினி விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல். ஏற்கனவே பேட்ட ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ரஜினி இளமையாகவும், ஸ்டைலாகவும் இருந்ததாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். இந்த படத்தின் ஒரு பாடலை இன்றும், இன்னொரு பாடலை வருகிற 7-ம் தேதியும் வெளியிடுகிறார்கள். பாடல்கள் வெளியீட்டுRead More


பாகிஸ்தானில் 2.0 படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானில் 2.0 திரைப்படம் அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் 25 திரையரங்கில் 2.0 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து 75 திரையரங்குகளில் தற்போது படம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூலையும், அமெரிக்காவில்  12 கோடி ரூபாய் வசூலையும் 2.0 திரைப்படம் குவித்துள்ளது. 2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்க வாய்ப்பு உள்ளதாக திரைப்பட வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கர்நாடகாவில் 2.0 படத்தை திரையிட எதிர்த்து போராட்டம்

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடந்து. ஏற்கனவே காலா படத்தை திரையிடும்போதும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இப்போது 2.0 படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டர் எதிரில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பு தலைவரும் கன்னட சலுவளி கட்சி தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரஜினிக்கு எதிராகவும் கர்நாடகாவில் வேற்று மொழி படங்களை திரையிடக் கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- “கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிறமொழி படங்கள் அதிகம் திரையிடப்படுகின்றன. இதனால்Read More


ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2,000 இணையதள முகவரிகளை தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு  2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பதிவேற்றங்களை அனுமதிக்கக்கூடாது என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சுவையான, சத்தான மிளகு சாதம்

தேவையான பொருட்கள் : அரிசி – கால் கிலோ மிளகு – 1 டேபிள்ஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 1 முந்திரிப் பருப்பு – 5 நெய் – சிறிதளவு கடுகு, வேர்க்கடலை – சிறி்தளவு கறிவேப்பிலை – தேவைக்கு உப்பு – தேவைக்கு செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வேகவைத்து உதிரி சாதமாக வடித்துக்கொள்ளவும். வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அவற்றுடன் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும். ருசியான மிளகு சாதம் தயார்.