Featured Left

 
 

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி

சீனாவின் பீஜிங்கை  சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார். மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியுமா?

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதி பேர் அதாவது, பெருவாரியான மனநோயாளிகள் தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர். மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றைRead More


ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தகவல்

குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. 2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும்Read More


பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தைக்கால் காலனித் தெருவை சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்தராஜ் என்பவர், தனது மனைவி கார்த்திகாவின்  இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற கார்த்திகா, வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது பிரசவத்தின்போது, தவறுதலாக வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்தது தெரிய வந்துள்ளது. அதன்பின்னர், அறுவை சிகிச்சை மூலம் கையுறை அகற்றப்பட்டது. எனினும், தற்போது கார்த்திகா மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கார்த்திகாவின் கணவர் ஆனந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார்.


91 வயது மூதாட்டியை காதலித்து வரும் 31 வயது இளைஞன்

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயதான மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் இதுபோன்று வினோதமான காதலர்களை வௌிக்கொணர்கின்றனர். அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடியாக கைல் ஜோன்ஸ் (31) – மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர். இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர். இவர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் ஔிப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றன. இதுபற்றி ஜோன்ஸ் கூறுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் உறவு கொண்டுள்ளேன். ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போலRead More


அரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் – கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன. கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் நிதியுதவியும் கேட்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதிRead More


ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி ‘2.0’ படத்தை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் ‘2.0’ படத்தை வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இந்த உத்தரவையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ‘2.0’ படத்தை வெளியிட்டுள்ளது. சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே ரஜினியின் ‘2.0’ படத்தையும் இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்தது.Read More


‘நீயா-2’ படத்தில் நடித்த 22 அடி நீள ராஜநாகம்

1979 -ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திகில் படம், ‘நீயா.’ அதில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடியது. 39 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘நீயா-2’ என்ற பெயரில் தயாராகிறது. படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்யும் எல்.சுரேஷ் சொல்கிறார்:- “நீயா படம் ஒரு பாம்பின் கதையாக திரைக்கு வந்தது. அதன் இரண்டாம் பாகத்தை, வேறு ஒரு கதைக்களத்தில் புதிதாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி வருகிறோம். இதில் ஜெய், வர லட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடிக் கிறார்கள். ‘நீயா’ படத்தில் இடம் பெற்ற “ஒரே ஜீவன்…” பாடலை இரண்டாம் பாகம் படத்துக்காக மறு உருவாக்கம் செய்து இருக்கிறோம். ஷபீர் இசையமைத்து இருக்கிறார்.Read More


தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம் – மனைவிகளை, 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்

தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம், பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 300 ஜோடிகள் கலந்து கொண்டனர். போட்டியின் விதிப்படி தங்களது திருமண உடையில் அணிவகுத்த தம்பதியினர், சுமார் 3 கிலோ மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டனர். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் மனைவிகளை, அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரம் கணவர்கள் தூக்கி செல்ல வேண்டும். இதில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு தேன் நிலவுக்கான சுமார் 42 லட்சம் மதிப்பிலான பரிசுத் கூப்பன் வழங்கப்பட்டது.


டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவருக்கு பதில் வேறு படம் ஹேக்கர்கள் கைவரிசை

அமெரிக்காவின் 45-வது அதிபராக  2017-ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதிபர்  தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற கிளாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கபட்ட போது  இவர் வெற்றி பெற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார். அதன் பின் இவர் எது செய்தாலும், சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவும் யோசிக்காமல்   எடுப்பதால், அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்து விடுகிறது. இதனால் பலரும் டிரம்ப் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆப்பிள் போனில் இருக்கும் சிரி ஆப்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பற்றி கேட்ட போது, அவருடைய விக்கிப்பிடியாவில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, மிகவும் அசிங்கமான புகைப்படம் வந்துள்ளது. இது ஹேக்கர்களின் வேலையாகத் தான் இருக்கும் எனவும், கடந்த வியாழக்கிழமை பார்த்த அனைவருக்கும் இந்த புகைப்படம் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More