canada

 
 

குத்துச்சண்டை வீரரை கொலைசெய்தவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

யூ.எப்.சி. குத்துச்சண்டை வீரர் ரையன் ஜிம்மோவை கொலைசெய்த குற்றத்திற்காக, எட்மண்டனைச் சேர்ந்த 26 வயதான ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மண்டன் நீதிமன்றத்தால் நேற்று (திங்கட்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனைக்காலம் நிறைவடைந்த பின்னர், மேலும் 8 வருடங்களுக்கு வாகனங்களை செலுத்தவும் தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கெட்ஸ்செல் என்பவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் கெட்ஸ்செல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கெட்ஸ்செல்லின் வாகனமும் ஜிம்மோவின் வாகனமும் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்டது. இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாக ஜிம்மோவை கெட்ஸ்செல் தனது பிக்கப் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச்சென்றார். படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டRead More


இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை

இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடன் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே உக்ரேனின் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனடா தமது இராணுவ பயிற்சி திட்டத்தை புதுப்பிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக உக்ரேன் அரசியல்வாதியான அன்ட்ரி ஷெவ்சென்கோ தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 உக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே ஜி-20 மாநாட்டின்போது நடைபெறவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கனடா – பிரித்தானிய பிரதமர்களுக்கிடையில் சந்திப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்தார். ஜி-20 மாநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கூடியுள்ள அரச தலைவர்கள் அங்கு நாடுகளுக்கிடையிலான சந்திப்பை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் இதன் ஒரு அங்கமாக இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜி-20 நாடுகளின் ஒத்துழைப்புகள் மற்றும் உலக பொருளாதார நிதி நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு 20 தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார, நிதி மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் அதிக கரிசனை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் – சவுதியிடம் தெரிவித்தார் கனடா பிரதமர்

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னரான விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டாதாக அவர் தெரிவித்தார். இதன்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பு குறித்து தெரிவித்த அவர், கடந்த மாதம் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கப்பல்களிலிருந்த உக்ரேனிய மாலுமிகளை விடுதலை செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


91 வயது மூதாட்டியை காதலித்து வரும் 31 வயது இளைஞன்

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயதான மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் இதுபோன்று வினோதமான காதலர்களை வௌிக்கொணர்கின்றனர். அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடியாக கைல் ஜோன்ஸ் (31) – மார்ஜோரி மெக்குல் (91) ஆகியோர் உள்ளனர். இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர். இவர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் ஔிப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றன. இதுபற்றி ஜோன்ஸ் கூறுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் உறவு கொண்டுள்ளேன். ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போலRead More


உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய இரு தலைவர்களை சந்தித்தார் பிரதமர்

ஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கருங்கடலில் பிரவேசித்த 3 உக்ரேன் கப்பல்களை ரஷ்யா சிறைபிடித்துள்ளது. கப்பலில் சென்ற குழுவினரையும் தடுத்துவைத்துள்ளது. இதற்கெதிராக உலக நாடுகள் குரல்கொடுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை சவுதி அரேபிய முடிவுக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பில் கனடாவும் கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிவிப்பு வெளியாகவில்லை.


ரொறன்ரோ பொலிஸார் மீது பாலியல் குற்றச்சாட்டு

ரொறன்ரோ பொலிஸார் மீது நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். ரொறன்ரோ பொலிஸை சேர்ந்த குறித்த நான்கு பெண் உத்தியோகத்தர்களும் ரொறன்ரோ பொலிஸார் மீது அத்தகைய குற்றச்சாட்டினைப் பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாம் பணியில் இருக்கும்போது பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கும் அந்தப் பெண்கள் ரொறன்ரோ பொலிஸார் சேவைகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவுள்ளதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தாங்கள் கடமையில் இருக்கும் வேளைகளில், ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான பாலியல் தாக்கத்தின் ஏற்படுத்தும் குறுந்தகவல்கள் தமக்கு அனுப்பப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். குறுந்தகவல்கள் மட்டுமின்றி, தரக்குறைவான விடயங்கள், படங்கள் என்பனவும் அவர்களுக்கு அனுப்பபபட்டுள்ளதாக, அவை எவ்வளவு மோசமானவை என்பதனை கூறினால் யாராலும் அதனை நம்ப முடியாது என்றும், தனது 40 ஆண்டுகாள வழக்றிஞர் அனுபவத்தில் பெண்கள் உரிமைகளுக்கு எதிரானRead More


ஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்து

ஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிர்ச்மவுன் சாலை மற்றும் ஃபாக்ரிட்ஜ் டிரைவ், செயிண்ட் கிளேர் அவென்யூ ஈஸ்டின் வடக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு குறித்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் ஒரு வாகனம் சாலையை விட்டு வெளியேறி ஒரு வேலியுடன் மோதியத்துடன், மற்றய வாகனம் தீ பிடித்து எரிந்துள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் இரு காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். அதில் 3 பேர்ஆபத்தான நிலையில் trauma centreக்கும், 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்தோடு இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் கைது செய்ய காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ரொறன்ரோ பொலிஸார் மேலதிக விசரணைகளைRead More


மாவீரர் நாள் – எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்

மாவீரர் நாள் – 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்கவனமும் நாடாளுமன்றத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த பின்னணிக்குள் மாவீரர் வாரம் தொடங்கும் வரையிலும் ஊடகங்களின் கவனமும் மாவீரர் நாளை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் மாவீpரர் வாரம் தொடங்கிய உடனேயே தமிழ் பகுதிகளில் ஏற்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின. மகிந்தRead More


சாஸ்கடூன் துப்பாக்கி சூடு – பொலிஸார் தீவிர விசாரணை

சாஸ்கடூனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர், செயிண்ட். போல் மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 8மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான ஆணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த துப்பாக்கி சூடு எங்கு நடத்தப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. எனினும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.