ca

 
 

4 நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்தார்

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கே சென்று நேரில் வரவேற்றார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகள் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவருடைய இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ பயணமாக ஹசீனா இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். தனது இந்திய பயணத்துக்காக நேற்று அவர் உயர் அதிகாரிகளுடன் தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடைய வருகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக வழக்கமான மரபுகளை மீறி பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கே சென்று ஹசீனாவுக்கு வரவேற்பு அளித்தார். அப்போதுRead More


கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில் மர­ணத்­த­று­வாயில் இருப்­ப­வர்­க­ளுக்கு தற்­கொ­லைக்கு உத­வு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் சட்­ட­மூலம்நிறை­வேற்றம்

உயி­ரா­பத்­தான நோயால் பீடிக்­கப்­பட்டு மர­ணத்­த­று­வாயில் இருப்­ப­வர்­க­ளுக்கு மருத்­துவ ரீதியில் மர­ணத்தைத் தழு­வு­வ­தற்கு உதவுவதை அங்கீகரிக்கும் சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மூ­லமொன்று கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில் நிறைவேற்­றப்­பட்­டுள்­ளது. குணப்­ப­டுத்த முடி­யாத நோய்களால் துன்­பப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு மர­ண­ம­டைய மருத்­து­வர்கள் உத­வு­வ­தற்கு அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் தடை­வி­தித்­ததற்கு பின்­னரே மேற்­படி சட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் கடும் சுக­வீ­னத்­துக்­குள்­ளான வர்­க­ளுக்கு மர­ணத்தைத் தழு­வு­வ­தற்கு மருத்­து­வர்­க­ளுக்கு சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­தி­ய­ளித்­துள்ள உல­கி­லுள்ள ஒரு சில நாடு­களில் கன­டாவும் இடம்­பி­டித்­துள்­ளது. ஏற்­க­னவே அந்­நாட்டு பாரா­ளு­மன்ற கீழ் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட இந்த சட்­ட­மூலம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற செனட் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ளது. தற்­போது அந்த சட்­ட­மூலம் சட்­ட­மா­வ­தற்கு அந்­நாட்டில் எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஆளுநர் நாய­கத்தின் அங்­கீ­கா­ரத்தை மட்­டுமே பெற வேண்­டி­யுள்­ளது. கடும் நோயால் துன்­பப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு தற்­கொ­லைக்கு உத­வி­ய­ளித்தல் சுவிட் ­ஸர்­லாந்து, நெதர்லாந்து, அல்­பே­னியா, கொலம்­பியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளிலும்Read More


பிரோம்ப்டனில் தாயைக் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த மகனுக்கு போலிஸ் வலைவீச்சு !!

பிரோம்ப்டனில் கடந்த ஞாயிறு இரவு 10:30 மணியளவில் Sled Dog ரோட்டில் நடந்துள்ளது இந்தச் சம்பவம். 21 வயது நபர் ஒருவர் 46 வயதாகும் பெண்மணியை கத்தியால் இருமுறை குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட நபரும் பெண்மணியும் தாய் – மகன் என்பது தெரிய வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடிய அந்தப் பெண்மணி மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கபப்ட்டுள்ளார். அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குத்தி விட்டு தப்பிச் சென்ற 21 வயதாகும் நபரை தீவிரமாக தேடி வந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அவரை கைது செய்துள்ளனர். ராஜ்விர் சஜன் என்ற அந்த நபர் இன்று கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது