Business

 
 

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.


அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபாயை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோRead More


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய பணம் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அன்னிய செலாவணியின் இருப்பு மாற்றம், கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காணரங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், உரிய பலன்கள் கிடைக்காமல் இந்திய பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்ற நிதி கொள்கை முடிவை அறிவித்தது. இதனால் ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி அடைந்து 74 ரூபாய் 22 காசு ஆனது. அதன் பிறகு சற்று பணத்தின் மதிப்பில் எழுச்சி ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை 73 ரூபாய் 76 காசாக இருந்தது. நேற்று மார்க்கெட் ஆரம்பமான போது அதில் 14 காசு உயர்ந்து இருந்தது. அதன் பிறகு அதிகபட்சமாகRead More


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 792 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.


இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி,Read More


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது ரூ.73.26 ஆக இருந்தது.  அதன்பின் தொடர்ந்து அது பலவீனமடைந்தது.  இதனால் கடந்த திங்கட்கிழமை ரூ.72.91 என்ற மதிப்பில் முடிவடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் வீழ்ச்சி கண்டு முதன்முறையாக இன்று ரூ.73.34 ஆக சரிவடைந்தது. உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிக அளவு அமெரிக்க டாலர் தேவை ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதேவேளையில் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 137.62 புள்ளிகள் சரிவடைந்து 36,388.52 புள்ளிகளாக உள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பங்கு சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.


ரூ.5000 கோடி வங்கிக் கடன் மோசடி – குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?

குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது. இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவுRead More


புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சுசுகி நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் சர்வதேச வாகனங்கள் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக மாற்றப்பட்டு, சிறப்பு விலையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே சுசுகி நிறுவனம் லெட்ஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை ஜப்பானில் விற்பனை செய்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் லெட்ஸ் இ.வி. வெர்ஷன் ஸ்கூட்டர் புதிய வடிவமைப்புடன் வெளியாகும் என தெரிகிறது. புதிய ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் சர்வதேச சந்தைகளில் பொதுவான ஒன்றாக இருக்கும் நிலையில், வெளிப்புற வடிவமைப்பு மட்டும் சுசுகிRead More


டொயோட்டா இன்னோவா புதிய விலை

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. பல்வேறு வேரியன்ட்களில் கிடைக்கும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எமர்ஜென்சி பிரேக் சிக்னல், பின்புறம் ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் எல்இடி ஃபாக் லேம்ப்கள், ஆன்டி-தெஃப்ட் அலாரம், கிளாஸ் பிரேக் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார் போன்றவை வழங்கப்படுகிறது. புதிய அம்சங்களுடன் கார்களின் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ.30,000 வரை, இன்னோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் விலை ரூ.44,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் நிறைந்த பார்ச்சூனர் மாடலின் விலை ரூ.58,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இன்னோவா க்ரிஸ்டா GX வேரியன்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், பவர்-ஃபோல்டிங் விங் மிரர்கள்Read More


வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவது, அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் போன்ற காரணிகளால், தொடர்ந்து  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், டலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.27 ஆக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.