Articles

 
 

மாவீரர் நாள் – எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்

மாவீரர் நாள் – 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்கவனமும் நாடாளுமன்றத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த பின்னணிக்குள் மாவீரர் வாரம் தொடங்கும் வரையிலும் ஊடகங்களின் கவனமும் மாவீரர் நாளை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் மாவீpரர் வாரம் தொடங்கிய உடனேயே தமிழ் பகுதிகளில் ஏற்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின. மகிந்தRead More


தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?

கனடா – மட்டக்களப்பு நட்பு பண்ணை உருவாக்கத்திற்கென 2016 ம் ஆண்டு கனேடிய தமிழர் பேரவை ( CTC ) சேகரித்த நிதிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கனடாவிற்கு வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து  கருத்து வெளியிட்டுள்ளார். 2016ம்ஆண்டு கனடாவிற்கு வருகை தான் வருகை தந்த போது கனேடியத் தமிழர் பேரவை கனடா – மட்டக்களப்பு நட்பு பண்ணை உருவாக்குதவற்கான நிதி சேர நடைபவனி ஒன்றை நடத்தியதாகவும் அதனை தொடர்ந்து பல சந்திப்புகளை இது தொடர்பில் நடத்தியிருந்தாகவும் அவர் கூறினார். இந்த நிதி சேர நடைபவனி மற்றும் சந்திப்புகளி் மூலமாக திரட்டப்பட்ட 80,000 டொலர்களுக்கும் அதிகமான நிதித் தொகை இதுவரை அந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படவில்லைRead More


கனடாவில் திரையிடப்படும் உரு

இரண்டாயிரம்  ஆண்டுகளின்  தொடக்கத்தில்   சினிமாசார் தன்னார்வ  தொண்டு நிறுவங்களின்  ஊடாக இலங்கையில்  தமிழ் சினிமாவை  ஆக்கப்பூர்வமாக மீள  செயற்படுத்த  முயன்ற  காசிநாதர்  ஞானதாஸ் நீண்ட இடைவெளிக்கு  பின்  இயக்கி  சர்வதேச  மட்டத்தில்  அங்கீகரிக்க பட்ட  உரு  திரைப்படம்  இம்மாதம்  13ம் திகதி  மதியம் 1 மணி  மற்றும் 3மணி  காட்சிகளாக  Woodside திரையரங்கில் திரையிடப்படுகிறது. இயக்குனர்  ஞானதாஸின்  கனடா  வருகையை  ஒட்டிய இத்திரையிடல்  உரு  படைப்பு  பற்றிய  தேடலையும் அது கனேடிய திரைத்துறைக்கு  சொல்லும்  சேதி  என்ன  என்பது  குறித்தும் ஆராய தூண்டுகிறது. காணாமல்  போனவர்களுக்கான  காத்திருப்பு  என்கிற  உணர்வழுத்தம்  மிக்க  கருப்பொருளை  மிக  எளிமையான  காட்சி அமைப்புகள்  மூலம்   நகர்த்த  முயன்றமை  பார்வையாளர்களை  உடனடியாகவே  கதையோட்டத்துடன்  பயணப்பட  உதவுகின்றது. கதையோட்டத்துக்கான  திறவுகோலாக  நடு  இரவில்  சிந்தனை  சாகரத்தில்  சிக்கி  அல்லாடும்   ஒரு  தாய் சார்ந்த   மென்மையான Read More


நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்

கனடாவில் வாழும் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில் கனடாவின் மூன்று தளங்களிலும் மூன்று தமிழர்கள் கணிசமான கவனிப்பை இந்த ஆண்டு பெற்றுள்ளார்கள். கனடாவின் தேசிய லிபரல் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி பாரம்பரியம் மற்றும் பல்கலாசார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் என்ற பதவி நிலையினை பெற்றுள்ளார் மகாண அரசில் கொன்சவெற்றிவ் கட்சியின் சார்பில் தெரிவான இளம் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்திற்கு ஒன்ராறியோ மாகாண உறுப்பினர்களின் நலன்களை பேணும் நிலையியற் குழுவின் துணைத் தலைவராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். ரொரன்ரோ நகர சபையில் நீதன் ஷான் பல்வேறு உப குழுக்களின் தலைவராகவும் வட மாகணத்துடனான உறவுப் பாலம் அமைக்கும் செயல் திட்டத்தின் பிரதான அங்கமாகவும் விளங்குகின்றார். இந்த கட்டுரையாளருக்கு இவர்கள் மீதான மாறுபட்ட விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் உண்டு இருந்தாலும் அதனையும் தாண்டி ஒரு சமூகமாகRead More


தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!

தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?! புலம்பெயர் அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்று அங்கலாய்ப்பவர்களும், அனுதாபக் கண்ணோடு நோக்குபவர்களும், ஐயகோ என்று அபலக்குரல் எழுப்புபவர்களும் ஒரு பக்கம். தமிழினம் எக்கேடு கெட்டாலென்ன என்று, தாங்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களும் என்றவகையில் தம்போக்கில் தமிங்கிலராக வாழும் தமிழர்கள் இன்னுமொரு பக்கம். யார் என்ன சொன்னால் நமக்கென்ன என்ற போக்கில் தம் சுயநலன் சார்ந்து மட்டுமே செயற்பட்டு தமக்கான தனிப்பட்ட வருவாய்க்காக, புகழுக்காக, விளம்பரத்திற்காக அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக சூட்சுமமான அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபடும் தனிநபர்கள் பிறிதொரு பக்கமென, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அரசியல் நகர்வுகள், குறிப்பாக கனடாவில் பெருமளவில் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், மொன்றியல் போன்ற பெருநகரங்களில் வாழும் தமிழர்களின் அரசியல் நகர்வுகள், எதிர்கால தமிழ்-கனடியர்களின் ஒன்றுபட்ட அரசியல் பலத்தைக்Read More


ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்

ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன் 2019ன் பிற்பகுதியில் மீண்டும் ஒரு தேர்தலை கனடிய மக்கள் சந்திக்கவுள்ளார்கள். அடுத்த தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். ஒன்ராரியோவில் ஊழல் லிபரல் அரசுக்கு எதிராக 40 வீதமான வாக்குகளை மட்டும் பெற்று அதிக ஆசனங்களைப் பெற்ற பழமைவாதக் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே நீதி மன்ற முடிவுகளையே புறந்தள்ளி, சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது. அவ்வாறான ஆட்சி மத்தியில் இல்லை. ஆனால் முன்னால் பிரதமர் பியறி எலியட் ரூடோவின் மகன் ஜஸ்ரின் ரூடோ பலத்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில், கடும் போக்கை கடைப்பிடித்த ஸ்ரீபன் காப்பர் அரசை அதி பெரும்பான்மையாக வெற்றி கொண்டு ஆட்சிக்கு வந்தார். (இவர் வாரிசு அல்ல. பியறி எலியட் ரூடோ, ஒரு பொழுதும் ஜஸ்ரின் பிரதமராக வருவாரோ அல்லது தன்னைப்Read More


தாய்வீட்டின், அரங்கியல் விழா 2018


தலிபான் கானின் நயா பாகிஸ்தான் ரதன்

இம்ரான் கான் முன்னால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக கிரிக்கெட் குழுத் தலைவர். ஒகஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். உலக கிரிக்கெட் கோப்பையை பாகிஸ்தான் ஒரேயொரு தடவையே வென்றது. இவரது தலைமையிலேயே பாகிஸ்தான் அவ் வெற்றியைப் பெற்றது. சிறந்த வேகப் பந்து வீச்சாளர். நன்றாக துடுப்பெடுத்துடுவார். இவரது முன்னால் மனைவி இளவரசி டயனாவின் சிநிகேதி. இலண்டனில் கல்வி கற்ற காலங்களில் இவர் ஒரு பிளே போயாகத்தானிருந்தார் என ஊடகங்கள் கூறுகின்றன. இவர் மூன்று தடவைகள் திருமணம் செய்தவர். Pashtuns, Pathans Kan, Kogan  என்ற வம்சாவளியில் ஒக்ரோபர் 5, 1952ல் இம்ரான் அவதரித்தார். இவரது மூதாதையர் மொங்கோலியாவில் தோன்றி பின்னர் ஈரான், ஆப்கான், பாகிஸ்தான் பிரதேசங்களுக்கு புலம் பெயர்ந்தனர் என நம்பப்படுகின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் நகரில் பிறந்து, அங்கேயே கல்வி கற்று, பின்னர்Read More


தரிசிக்கவேண்டிய நிகழ்காலம். – sep 2018 editorial

ஒரு சமூகம் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வாரலாற்றை வகிடெடுத்துப் படித்துப் பாருங்கள். அதே சமூகத்தின் நிகழ்காலத்தை தரிசிக்க வேண்டுமா? கல்லூரிக்குப் போங்கள். கவனித்தல் என்று ஒரு சொல் தமிழில் உண்டு. அற்புதமான சொல் எந்தெந்த இடத்தில் வருதோ அந்தந்த இடத்தை அழகு செய்யும். வகுப்பறையில் ஆசிரியர் கவனி என்றால் பாடத்தைக் கிரகித்துக்கொள் என அர்த்தப்படும். புகையிரத நிலையத்தில் பயணிகளின் கவனத்துக்கு என்பது பயண அறிவுறுத்ல் என அர்தப்படும். ஓர் திருமண நிகழ்வில் என்னை நன்றாகக் கவனித்தார்கள் என்பது சிறப்பான விருந்தோம்பலைக் குறிக்கும். வைத்தியசாலையில் நோயாளியை நன்றாகக் கவனித்தார்கள் என்பது சிறப்பாக பராமரித்தார்கள் எனப் புரிந்து கொள்ளலாம். காவல் நிலையத்தில் கவனித்தார்கள் என்பது தண்டனையைக் குறிக்கும். ஒருவர் பெரிய கூட்டத்திலும் என்னைக் கவனித்தார் என்பது முக்கியத்துவம் பெறுவதைச் சுட்டிக்காட்டுகிறது. இப்படியாக அழகாக…அழகாக…அர்த்தங்கள் சொல்லும் சொல்Read More


உண்ணா நோன்புகள் போராட்ட வரலாறு திருப்பங்கள்

உண்ணா நோன்புகள் போராட்ட வரலாறு திருப்பங்கள் செப்.26 – சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி – திலீபன் நினைவு நாள். உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள் ஆயுத வழியிலும் உண்ணாநிலை வழியிலும் நடத்தப்பட்டால் மட்டுமே ஒடுக்குமுறையாளர்களை குலை நடுங்க வைக்கின்றன. அயர்லாந்து விடுதலைக்காக சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் நீத்த பாபி சாண்ட்ஸ் பெயர் இன்றும் விடுதலையை நேசிப்பவர்களின் உதடுகளில் உச்சரிக்கப்படுகிறது. காந்தியார் நடத்திய இந்திய விடுதலைக்கான அறப்போரில் அவரின் உண்ணாநிலைப் போராட்டங்கள் மக்களை போராடும் படி தூண்டியே வந்துள்ளது. காந்தியார் 17 முறை உண்ணாநிலை இருந்துள்ளார். அவரின் உண்ணாநிலைப் போராட்டங்கள் மூன்று வாரங்களுக்கு தாண்டியதில்லை. அவரைப் போலவே இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட பகத்சிங்கின் தோழர் ஜிதீந்திராநாத் தாஸ் 1929இல் லாகூரில் 63 நாட்கள் உண்ணா நிலைRead More