முன்னாள் போராளி

 
 

கிளிநொச்சியில் முன்னாள் போராளி வெள்ளைவானில் கடத்தல்!

கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு கைது செய்து சென்றுள்ளனர். யார் கைது செய்தது? ஏன் கைது செய்யதனர்? எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று எவருக்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவும் இல்லை. எனவே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவினர்கள்Read More