புற்று நோய்

 
 

ஊசி மூலம் புற்று நோய் ஏற்படுத்த முடியாது!

ஊசி மூலம் புற்று நோய் ஏற்படுத்த முடியாது என புற்று நோய் வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் நிபுணத்துவ டொக்டர் மகேந்ர பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விச ஊசி மூலம் புற்று நோய் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், ஊசி மூலம் புற்று நோயைப் பரப்புவதற்கு முடியும் என உலகின் எந்தவொரு நாட்டிலும் இதுவரையில் பதிவாகவில்லை. புற்று நோய் ஏற்பட்ட ஒருவரினால் மற்றுமொருவருக்கு எந்த வகையிலும்தொற்றாது. ஊசி ஏற்றி புற்று நோய் பரப்பப்பட்டதாக புலம்பெயர் சமூகம் பிரச்சாரம் செய்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.