பிரகீத்

 
 

பிரகீத் வரைந்த கேலிச்சித்திரமே அவரைக் கடத்தக் காரணமாக அமைந்தது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உபசேன மற்றும் லான்ஸ் கோப்ரல் ரூபசேன ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மீதான விசாரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். காரணமின்றித் தாம் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, இவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று பிரதம நீதியரசர் சிறீபவன் தலைமையிலான மூற்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் கருத்துத் தெரிவிக்கும்போது,Read More