நல்லூர்

 
 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்று வந்தது. பெருந்திரளான பக்தர்களின் அரேகரா கோஷத்தின் மத்தியில் நல்லூர் கந்தன் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதரமாய் தேரில் வீதியுலா வந்தார். அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து, காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது. ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு பெருந்தொகையாக பக்தர்கள் சென்றிருந்தனர். நீண்ட தூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவுசெய்யும் பொருட்டு காவடிகள், பாற்செம்பு, கற்பூரச் சட்டிகளை ஏந்திவந்த காட்சிகள் வீதியெங்கும் பரவசமாக இருந்தன. கந்தனின் தேருலாக் காட்சியைக் காண வந்த பக்தர்களுக்கு தாக சாந்தியை பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்துRead More


நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள்.!

யாழ்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த விஷேட சேவை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று தினங்களில் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணிக்கும் 4021ஆம் இலக்கம் கொண்ட ரயிலில் மேலதிமாக குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படும். அதேபோல் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை ரயில் நிலையம் வரையிலும் பயணிக்கும் 4022ஆம் இலக்கம் கொண்ட ரயிலில் மேலதிமாக குளிரூட்டப்பட்ட பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.