சசிகலா

 
 

பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா சென்னை வந்தடைந்தார்!

பெங்களூரு சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயர் நகருக்கு கார் மூலம் வந்தடைந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் பரோல் கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பத்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சிறைத்துறை சில நிபந்தனைகளுடன் கூடிய 5 நாள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, சிறை வளாகத்தில் இருந்து இன்று மாலை கிளம்பிய அவர் கார் மூலமாகவே சென்னை வந்தடைந்தார். அவருடன் டி.டி.வி தினகரன் உள்ளிட்டவர்களும் வந்தனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளவரசியின் மகன் வீட்டுக்கு வந்தடைந்த சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்றனர். கட்சி ரீதியில் யாருடனும் ஆலோசனை நடத்தக்கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சொகுசு வாழ்க்கை முடிந்தது – சசிகலாவுக்கு சிறை உணவு

சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தண்டனை கைதிகளுக்கு வெளியில் இருந்து வரும் உணவு பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அனுமதிக்கப்படவில்லை. விசாரணை கைதிகளுக்கு மட்டும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது. கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்களுக்கு 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரையே அனுமதி வழங்கப்படுகிறது. சில கைதிகளுக்கு மட்டும் வாரத்தில் 3 நாட்கள் உறவினர்களை பார்க்க அனுமதி உண்டு. சசிகலா போன்ற வி.வி.ஐ.பி. கைதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளரை அனுமதிக்க வேண்டும் என்று தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் சசிகலாவை அவரது உறவினர்களோ அல்லது வக்கீலோ 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க முடியும். இதுவரை சசிகலாவை சந்தித்தவர்களின் பின்னணி விவரங்களை மத்திய உளவுத்துறை திரட்டி உள்ளது. இதில்Read More