ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இந்திய அணி திணறல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. ராகுல் 2 ரன்களுக்கும், முரளி விஜய் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 3 ரன்களும், ரஹானே 13 ரன்களும் எடுத்த நிலையில் வெளியேறினர். 41 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்திருந்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில்  இந்தியா 9  விக்கெட் இழப்பிற்கு 250  ரன்கள் எடுத்து உள்ளது.  இன்றைய ஆட்டத்தில் புஜாரா சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் விளாசியுள்ள புஜாரா 5 ஆயிரம் ரன்களை கடந்தார். சிறப்பாக விளையாடிய புஜாரா 123 ரன்களில் ரன் அவுட் ஆனார்.


Related News

 • அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு
 • ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்
 • ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?
 • இந்தியா-ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது
 • காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்
 • இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட் – மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
 • இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி
 • டெஸ்ட் கிரிக்கெட் தொடர் – இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *