முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு

கலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் ஆதமா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்..!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் தில்லை சிவலிங்கம் அவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இயற்கைச்சாவு அடைந்துள்ளார்.

சிலம்படி, சிந்துநடைக் கூத்து, நாடகத்துறை, உடுக்கு,போர்த்தேங்காய் உடைத்தல், கரக ஆட்டம்,நாட்டார் பாடல் எனப் பல்வேறு கிராமியக் கலைத்துறைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட கலாபூஷனம் சிவலிங்ம் அவர்கள் வடமராட்சியில் மட்டுமல்லாது வடமாகாணம் என்றும் புகழ் பெற்று விளங்கியவர். இந்தக் கலைகள் தன்னுடன் மட்டும் மறைந்து போய்விடக்கூடாது என்பதற்காக இளம் தமைலமுறையினருக்கு இலவசமாகவே . கற்றுக் கொடுத்த ஒரு உன்னதமான கலைஞனைத் தமிழ் மண் இழந்து தவிக்கின்றது.
வல்வை முத்துமாரி அம்மனின் தீவிர பக்தனாக இருந்து எவர் நேர்த்திக
கடனுக்காகக் கரகம் எடுத்தாலும் அந்த இடத்திற்குச் சென்று இனிய நாதம் எழுப்பும் உடுக்கு ஒலியுடன், கணிரென்ற குரலில், முத்துமாரி அம்மனின் பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் அந்தக் காட்சி இன்றும் எங்கள் ஒவ்வொருவரின் மனக் கண்களிலும் நிழலாடுகின்றது.
தமிழீழக் கடற்பரப்பில்வீரத்துடன் போராடியய சூசை அவர்களின் மூத்த சகோதரர் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ள அமரர் சிவலிங்கம் அவர்கள் இன்னும் இரட்டிப்புப் பெருமையுடன் இந்த மண்ணிலே நடமாடிய ஒரு கலைஞன்….!
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவரால் உருவாக்கப்பட்ட, அவரது கலைப் பரம்பரை ஒன்று வ
ல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில்இன்றும் மறைந்து போகாது நாட்டார் கலைகளைப் பாதுகாத்துவருகின்றது என்றால் அது அமரர் சிவலிங்கம் அவர்களின் அர்ப்பணிபபு மிக்க கலைச் சேவையினாலேயே என்பதை நினைக்கும் பொழுது எங்கள் நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.
பொலிகண்டி மண் பெற்றெடுத்த ஒரு மாபெரும் கலைஞனாகத் திகழ்ந்த கலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல் லாது உலகத் தமிழச் சமூகத்திற்கே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பhகும்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மனினதும், பொலிகண்டிகந்தவனக் கந்தனினதும் பாதார விந்தங்களை சென்றடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்ததிக்கின்றோம்….!

முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் மே 18 ம் திகதி தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி , தலைக்கு மேல் உடுக்கை மட்டும் சுமந்த ,தன் முத்துமாரியை வேண்டிவந்ததாக என்னிடம் கூறினார் . இக்காணொளியை 2010 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *