விஜய் மல்லையா மனு – அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல மதுபான நிறுவன தொழிலதிபரான, விஜய் மல்லையா, கடன் மோசடி செய்ததாக, பல வங்கிகள், வழக்குகள் தொடர்ந்தன. இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்ற வாளி என அறிவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை, அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியும். இந்த மனுவை எதிர்த்து, மல்லையா தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டும், மும்பை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து மல்லையா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்கே கவுல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை சிறப்பு கோர்ட்டின் விசாரணைக்கு தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


Related News

 • புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
 • பட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
 • ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
 • விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது – பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்
 • புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்
 • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்
 • காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – அமைச்சர் ஜெயக்குமார்
 • எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *