ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இரட்டை கத்திக்குத்து

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்விஸ் தெரு, ஜார்விஸ் தெரு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் காயமுற்ற 35 வயதுடையவரை மீட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிலிர்த்து நேரத்தில் உயிரிழந்திருந்தார்.

அத்தோடு மற்றுமொருவர் உணவகம் ஒன்றில் காயமடைந்த நிலையில் மீட்டதாகவும், அவரை விசாரணை செய்த பொலிஸார் அவர் மீது இரண்டாவது கொலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும் இந்த கத்திக்குத்து சம்பவத்துடன் சேர்த்து இந்த வருடத்தில் ரொறன்ரோவில் நடைபெற்ற 92 ஆவது படுகொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(Next News) »Related News

 • பாரிய அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்பு: இன்று 101ஆம் ஆண்டு நினைவுதினம்
 • ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு
 • கஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை – கியூபெக்கில் சட்டமூலம்
 • நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!
 • மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது
 • எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • பொதுமக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்
 • மிசிசாகுவா விபத்து – பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *