இலவசமாக குழந்தையை பெற்றுக்கொடுக்கும் “மரிசா“
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண் ஒருவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த பெண் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவை சேர்ந்த மரிசா என்ற பெண் ஒருவர், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தருகிறார்.
குழந்தை பெற முடியாதவர்களுக்கு உதவவே 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக குழந்தை பெற்றெடுத்து தருகிறார் இந்தக் கனடியப் பெண்மணி.
ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் மரிசா “மலேனா” என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
அவர் கூறும் போது, “நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன். குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
இது ஒன்றும் என் குழந்தை இல்லை கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை. நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.
கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 – 1,20 ,000 டொலர் பணம் பெறுவார்கள்.
கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லையே என புன்னகைத்தபடி சொல்கிறார் மரிசா.
Related News

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இரட்டை கத்திக்குத்து
ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.Read More

இலவசமாக குழந்தையை பெற்றுக்கொடுக்கும் “மரிசா“
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண் ஒருவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த பெண்Read More