பட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்

அகமத்நகரில் நடைபெற்ற விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட நிதின் கட்காரி மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மேடையில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் பிடித்துக் கொண்டார்.

மேடையில் பேசிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார். பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்ட போது மயக்கமடைந்தார். உடனடியாக நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் ஷீரடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “சர்க்கரையின் அளவு குறைந்தது காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். என்னை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னுடைய நலம் விரும்பிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Related News

 • புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
 • பட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்
 • ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
 • விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது – பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்
 • புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்
 • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்
 • காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – அமைச்சர் ஜெயக்குமார்
 • எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *