இயற்கை விவசாய வாரம் 08/12/2018 to 14/12/2018 (ekuruvi editorial)

புத்தாயிரத்தின் பதின்மங்கள் தொலையும் காலமாய் 2017 முடிந்து 2018 தொடங்குகின்றது. 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழனத்தின் கனவுகளை சிதைத்து போட்ட பின்னரான பொழுதுகளில் இனி என்ன ? என்று எங்கள் எல்லோருக்குள்ளும் ஆயிரமாயிரமாய் கேள்விகள் எழுந்தன. யுத்தம் களவாடிய  தாயக மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்வாதாரங்களையும்  மீண்டும் கட்டியெழுப்புவது ஒன்றே தமிழராய் நாம் செய்ய வேண்டிய பெரும் பணி என்பதுணர்ந்தோம்.

எமது மக்களின் மிகப்பெரும் சொத்தாய் விளங்கிய கல்வியினை காலத்தின் ஓட்டத்தில் தொலைத்துவிடாமல் இருப்பதற்கும் நம்பிக்கையீனங்கள் என்ற கறுப்புத் திரைகளால் எங்கள் எதிர்காலம் மறைக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்குமாய் ‘புதிய வெளிச்சம்: எனும் சிறு ஒளிக்கீற்றினை பரவச் செய்தோம். கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பல்வேறு பகுதிகளிலும் சந்தித்து உளவள ஆற்றுப்படுத்தல்களையும் நம்பிக்கையூட்டல்களையும் வழங்கியிருந்தோம்.

wssw - Copyஇது ஒரு நாளின் ஒரு பொழுதில் தீராத வலியென்பதும் தொடர்ச்சியான ஆற்றுப்படுத்தல்கள் அவசியமாகும் ஒரு தொடர் பொறிமுறை என்பதையும் உணர்ந்தோம்.

கடந்த ஆண்டின் தொடர்ச்சியாய் இந்த ஆண்டிலும் புதிய வெளிச்சயம் கல்வியாளர்களை சந்திக்கின்றது. அதன் மூலம் கற்பித்தல் பொறிமுறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் தூண்டலை குறிப்பிட்ட சிலருக்காவது வழங்க முடியும் என்று புதிய வெளிச்சம் கருதுகின்றது.

மறுபுறம் தமிழர்களின் மரபுரிமைகளை கொண்டாடும் தை மாதத்தின் பொங்கலுக்கு முந்தைய வாரத்தை இயற்கை விவசாய வாரமாக பிரகடனப்படுத்தி முன்னெடுப்பதற்கும் புதிய வெளிச்சம் தீர்மானித்துள்ளது.

யுத்தம் தீவிரமான நடந்த காலத்தில் தாயக மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை தாண்டி அந்த மக்கள் நிமிர்ந்து நின்றமைக்கு காரணம்  எமது தாயகப் பரப்பில் செழிப்புடன் இருந்த விவசாய உற்பத்திகள் என்பதை நாம் மறந்து விடமுடியாது.

மாறி வரும் உலகப் பொருளாதார ஒழுங்குகளும் நவநாகரீக மோகமும் விவசாய நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் தெலைத்து விடுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.

இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சர்வதேச சந்தை மிகக் கனதியானது இலங்கையின் ஏனைய பாகங்களில் இருந்து இயற்கை விவசாய உற்பத்திகள் கனடா உற்பட ஏனைய பல மேற்குலக நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

இந்த நிலையில் இயற்கை விவசாயத்திற்கு உகந்த மண்வளத்தை கொண்டுள்ள எமது தாயக பகுதிகளில் இயற்கை விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலமாக எமது மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்புடுத்த முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவில் இயங்கை விவசாய உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராச்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர்கள், மற்றும் ஆராச்சியாளர்களுடன் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் விவசாய ஆராச்சிகளில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்கள் சிலரையும் இணைத்து இயற்கை விவாசயத்தின் முக்கியத்துவம், அதன் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இயங்களை விவசாயத்தின் உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பான கருத்தரங்குகளை மேற்கொள்ள புதிய வெளிச்சம் திட்டமிட்டுள்ளது.

இயற்கை விவசாய வாரம் என்பது இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த உரையாடல்களை சர்வதேச பரப்பில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
கனடாவ விவசாய உற்பத்திகளை பெருளவில் கொண்டுள்ள நாடு என்ற வகையிலும் விவசாயிகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் வேறெந்த நாடுகளும் வழங்க முடியாத அனுகூலங்களை வழங்கி வரும் நாடு என்ற அடிப்படையிலும் இங்குள்ள இயற்கை விவசாய ஆர்வலர்கள் பலரும் இந்த முயற்சியில் தன்னார்வத்துடன் கரம் கோர்த்துள்ளனர்.

இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெற்றிகரமான தொழில் நுட்பங்கள், விவசாய கருவிகள், மானிய முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் செயல் திட்டங்கள் குறித்து தாயக மக்களுடன் தமது அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கின்றனர்.

தாயகத்தில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை விவசாய உற்பத்திகளை புலம்பெயர் தேசத்தில் சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் இந்த கருத்தரங்குகளில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த செயல் திட்டமானது ஒரு வாரத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தொடர வேண்டும் என்பதோடு இது எமது மக்களின் வாழ்வாதாரத்தில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது பெருவிருப்பமாகும்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவென நாம் அழைத்தபோது உடனே வர சம்மதித்த கனடா , லண்டன் , இந்தியா போனற நாடுகளில் இருந்து வரும் அணைத்து கல்வியாளர்கள் , விவசாயிகளையும் இரு கரம் கூப்பி வரவேகின்றேன்

அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள் !!





Related News

  • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
  • ad
  • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
  • மாவீரர்கள் மீதான சத்தியம்!
  • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
  • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
  • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
  • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *