போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்

பல வாரங்களாக பிரான்சில் நடைபெற்றுவந்த போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருள் வரி உயர்வை நிறுத்திவைப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்பேரில் பிரதமர் எடுவார்ட் பிலிப்பே எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சமரசம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் ஆடை போராட்டம் தற்போது அரசாங்கத்தின் மீது பரவலான கோபத்தை பிரதிபலிப்பவையாகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரானவையாகவும் வளர்ந்துள்ளன.

அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து நால்வர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முக்கிய கொள்கையை பிரெஞ்சு ஜனாதிபதி நிறுத்துவது இதுவே முதல்முறையாகும்.

பிரான்சில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியில் தற்போது எரிபொருள் வரி உயர்வை நிறுத்துவதற்கு மக்ரோனின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.


Related News

 • அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்
 • சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு
 • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா
 • ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்
 • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
 • மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை
 • போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்
 • ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *