அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் அரசாங்கம் மிகவும் திடமாகவே உள்ளது என அந்நாட்டு பிரதமர் எத்துவா பிலிப் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று(வியாழக்கிழமை) இரவு வழங்கியுள்ள விசேட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

‘ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் தங்கள் உரிமைக்காக போராட வரவில்லை. மாறாக, பொலிஸாருடன் மோதவும், சேதம் விளைவிக்கவும் மட்டுமே வருகின்றனர்!’ எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறை தொடர்பிலான பல்வேறு தரவுகள் எம்மிடம் உள்ளன. அதில் பலர் வன்முறைகளை மனதில் கொண்டு மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் எனவும் எத்துவா பிலிப் சாடியுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளிடம் சிக்கி கோழி இறைச்சி போன்று வாட்டப்படுகின்றார்கள். இதுபோன்ற பிரான்ஸை நாம் பார்க்க விரும்பவில்லை. அரசு மிக திடமாகவும், நிலைப்பாட்டில் உறுதியாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதவி விலகும் எண்ணம் உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘இல்லை’ என பதிலளித்துள்ள அவர், அதுபோன்ற எவ்வித அழுத்தமும் எமக்கு இல்லை“ என தெரிவித்துள்ளார்.


Related News

 • அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்
 • சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி தேர்வு
 • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா
 • ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்
 • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
 • மருத்துவ அதிசயம் – இறந்த பெண்ணின் கருப்பையை கொண்டு இன்னொரு பெண்ணுக்கு குழந்தை
 • போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்
 • ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *