எது எப்படியோ, அது அப்படியே

2person
எது எப்படியோ, அது அப்படியே. தேர்தல் முடிந்து விட்டது. எதிர்பார்த்தவாறே முடிவுகள் வெளிவந்து விட்டன. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே கொன்சவேற்றிவ் கட்சி 2015ம் ஆண்டு மே மாதம், ஒ;ன்பதாம் திகதி பற்றிக் பிரவுனைத் தலைவராக தேர்வு செய்தது. அவர் பெற்ற வாக்கு வீதம் 61.8 ஆகும். இவ் வருட முற்பகுதியில் அவர் மீதான, பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவர் தலைபை; பதவியிலிருந்து நீக்கப்படும் வரை கொன்சவேற்றவ் கட்சியை அவர் புதிய பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார். எவ்வாறு தலைமைப் பதவிப் போட்டியில் வெற்றி பெற்றாரோ அவ்வாறே சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற சிறுபான்மையின சமூகங்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் எந்ந சிறுபான்மை அதிகமாகவுள்ளதோ, அங்கு அவர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதாக உறுதியளித்தார்.

eth appadiyoதமிழ்ச் சமூகத்துக்கும் மூன்று ஆசனங்களை ஓதுக்குவதாக கூறப்பட்டதாக அறியக் கிடைத்தது. இந்த மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கான போட்டிகள் அதிகரித்தன. முன்னால் தீவிர இடது சாரியும், பின்னர் கனடாவில் தீவிர என்.டி.பிக் கட்சி ஆதரவாளரும், அதன் பின்னர் லிபரல் கட்சியின் அதி தீவிர ஆதரவாளருமான கவுன்சிலர், கொன்சவேற்றிவ் கட்சி வேட்பாளர் போட்டிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ் வேட்பாளர்களுக்கிடையில் போட்டிகள் அதிகரித்தன. எதிரணியில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பங்களையும் முறியடிக்க குத்து வெட்டுகள் நடைபெற்றன. இறுதியாக பற்றிக் பிரவுன் தலைவராக இருந்த போது வேட்பாளர் நியமன தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளர், டக் போர்ட்டினால் நீக்கப்பட்டு வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் நியமிக்கப்பட்டார். டக் போர்ட்டின் பிரச்சாரக் குழுவில் முக்கிய அங்கத்தவராக இருந்த தமிழ் உறுப்பினர் ஒருவர், டக் போர்ட்டை தவறாக நிதி சேகரிப்பு இரவு விருந்துக்கு அழைத்து வந்ததாக கூறப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அது மட்டுமா தமித் தேசியத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வேட்பாளர், அதற்கெதிராக கருத்துத் தெரிவிக்க கட்சியால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறி, எதிரான கருத்தையும் தனது சமூக வலைத் தளத்தில் தெரிவித்தார். நகர் காவல வேட்பாளர் விவாதங்களில் கலந்து கொளள மறுப்பதாகவும், மக்களை மிரட்டுவதாகவும் சமூக வதை;தளங்கள் குற்றஞ்சாட்டின. தற்சமயம் நகர் காவல் அலுவலகம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. kadcu
தமிழ் வேட்பாளர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது அவர்களுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் நல்லது. இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும், அவர்களை மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்தையும் பாதிக்கும். வானொலி விளம்பரத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவேன் என்ற வாசகங்களும் ஒலிபரப்படுகின்றன. ஒன்ராரியோ பாராளுமன்றத்தின் எல்லைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் கட்சியின் கொள்கைகள், அவர்கள் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையில் என்ன கொள்கைகளை கடைப்பிடிக்கின்றார்கள், போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொழுது அவதானத்துடன் செயல்படுவதும் அவசியம். இக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒன்ராரியோ மாநில அவைக்கு முதல் தடவையாக இரு தமிழ் வேட்பாளர்கள் செல்கின்றார்கள். இவர்கள் எவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பதனைப் பொறுத்தே இவர்களது அடுத்த தேர்தல் வெற்றியமையும். கொன்சவேற்றிவ் அலையில் இவர்கள் கரை ஒதுங்கியுள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாது.

rougeகொன்சவேற்றிவ் அலை எவ்வாறு உருவானது? தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் கட்சியிருந்தது. ஊடகங்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட தலைவர் டக் போர்ட் தலைவரானார். கொன்சவேற்றிவ் கட்சி தனது வெற்றிக்கான தலைவரையே தேர்வு செய்ய விரும்பியது. விரும்பியோ விரும்பாமலோ டக் போர்ட் தலைவராகிவிட்டார். அதன் பின்னரும் டக் போர்ட்டை ஊடகங்கள் விடவில்லை. அவர் மீது சேற்றை வாரி இறைத்தன. அவை அனைத்தும் உண்மையான விடயங்கள். டக் போர்ட்டின் தம்பியும் முன்னால் ரொரன்ரோ மேயருமான ரொப் போhட்டின் மனைவியும் டக் போர்ட் மீது வழக்குத் தொடர்ந்தார். கொன்சவேற்றிவ் கட்சியின் அலையை இவற்றால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் 15 வருட கால லிபரல் ஆட்சியின் மீதான வெறுப்பு என்று கூறுவதை விட, ஒரு புதிய மாற்றம் தேவை என்பதனை மக்கள் விரும்பினார்கள் என்பது தெரிகின்றது. தொகுதி வாரி தேர்தல் முறையில் அதிக மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பதனை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். எனவே மக்கள் விருப்பு என்பது கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.
லிபரல் கட்சிக்கான எதிரலை கடந்த வருடத்தில் தொடங்கிய போதே கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். கட்சி, முதல்வர் கதலின் வின்னுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. லிபரல் அரசு தனது சாதனைகளை மக்கள் முன் முறையாக கொண்டு செல்லவில்லை. மாறாக அவர்கள் மீதான ஹைட்ரோ வன் தனியுடமையும், அதிக மின்சாரச் செலவுகளும், முன்னைய லிபரல் ஆட்சிமீதான ஊழல்கள் மீது, கதலின் வின்னின் அரசு வழக்குகளை முறையாக தொடராமை போன்றன கதலின் வின்னின் லிபரல் அரசு, உத்தியோக பூர்வ கட்சி நிலையை ஒன்ராரியோ சரித்திரத்தில் முதன் முறையாக இழக்க வைத்தது. sdcsdqwsq

லிபரல் கட்சிக்கு மாற்றீடான என்.டி.பிக் கட்சி தனது கொள்கைகளை முறையாக மக்கள் முன்வைக்கவில்லை. உண்மையில் லிபரல் கட்சி விரோத வாக்குகளே என்.டி.பிக்கு அதிகமாக கிடைத்துள்ளன. மத்தியில் என்.டி.பியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜக்மீட் சிங்கின் பிரதேசமான பிரம்ரன் நகரின் தொகுதிகளை என்.டி.பி கைப்பற்றியுள்ளது. என்.டி.பியின் கோட்டை எனக் கருதப்படும் பிரதேசங்களை என்.டி.பி தக்கவைத்துள்ளது. என்.டி.பி அலை எனக் கூறப்பட்டாலும், அதன் வீச்சு குறைவாகவே இருந்தது. என்.டி.பி மற்றும் லிபரல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் ஏனோ தானோ என தெரிவு செய்துள்ளார்கள். பல தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய தகுதியான வேட்பாளர்களை இக் கட்சிகள் தேர்வு செய்யத் தவறிவிட்டார்கள். லிபரல் இழந்த 48 தொகுதிகளில் 18ஐயே என்.டி.பி பெற்றுள்ளது. மிகுதி 30 தொகுதிகளையும் கொன்சவேற்றிவ் கட்சி பெற்றுள்ளது. 905 பகுதிகளில் குறிப்பாக வடக்கு ஒன்ராரியோ, பீல், மார்க்கம் போன்ற பகுதிகளில் கொன்சவேற்றிவ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. வழமையாக இப் பிரதேசங்களில் என்.டி.பிக் கட்சியின் வாக்குகள் மிகக் குறைவாகவே இருக்கும். இம் முறை மாறாக அதிகமாகவுள்ளது. இது லிபரல் எதிர்ப்பலையின் பெறுபேறு.

ஏற்கனவே லிபரல் கட்சித் தலைமைப் பதவியை கதலின் வின் துறந்துள்ளார். என்.டி.பிக் கட்சிக்கும் புதிய தலைவர் தேவை. மூன்று தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாமல் போன அன்றியா ஹவாத் தனது தலைமைப் பதவியை இராஜினமாச் செய்ய வேண்டும். வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்களுள் லோகன் கணபதி அமைச்சராகலாம். விஜய் தணிகாசலம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது தொகுதியில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். மக்கள் நன்மதிப்பை பெறாவிட்டால் அடுத்த தேர்தலில் தோல்வியடைய வேண்டிவரும். பல மாநகர கவுன்சிலர்கள் போட்டியிட்டுத் தோல்வியுற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஒரு மாநகரத் தேர்தல் காத்துநிற்கின்றது. ஏற்கனவே பல தமிழ் வேட்பாளர்கள் களம் கட்டி நிற்கின்றார்கள். இவர்களில் பலர் றியல் எஸ்ரேட் முகவர்கள். சரித்திரத்தில் இடம் பிடித்தாகிவிட்டது. இலவச விளம்பரத்தில் வியாபாரத்தையும் பெருக்கலாம்.

கொன்சவேற்றிவ்வுக்கு கிடைத்தது. 40 வீதமான வாக்குகள். தொகுதிகள் அதிகமாக இருந்தாலும், வாக்களித்தவர்களில் 60 வீதமானோர் கொன்சவேற்றிவ் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளார்கள். இதனை நாம் மறுக்க முடியாது. டக் போர்ட்டின் ஆட்சிக்குள் பல பிரபல்யங்கள் உள்ளார்கள். கரோலின் மல்றோனி, மைக் ஹரிசின் புதல்வர் மைக் ஹரிஸ் யூனியர், கிறிஸ் எலியட் எனப் பலர். டக் போர்ட் சற்றுச் சறுக்கினாலும், பற்றிக் பிரவுனுக்கு நடைபெற்றது இவருக்கும் நடக்கும்.
கொன்சவேற்றிவ் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தால், மீண்டும் நான்கு வருடங்களில் லிபரல் ஆட்சியமைவதை எவராலும் தடுக்க முடியாது.

ரதன்

june 7 2018

dack


Related News

 • பாரிய அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்பு: இன்று 101ஆம் ஆண்டு நினைவுதினம்
 • ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு
 • கஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை – கியூபெக்கில் சட்டமூலம்
 • நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!
 • மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது
 • எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • பொதுமக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்
 • மிசிசாகுவா விபத்து – பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *