இயற்கையோடு இணைக்கவென இரு வாரங்கள் தாய் மண்ணில்!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொல்லிப் போனான் வள்ளுவன். உழவுத் தொழிலின் மகிமையைக் குறிப்பிட மட்டும் அவன் அதைச் சொல்லவில்லை. அவனது காலத்தில் உழவின் மூலம் பெறுவதையே அனைவரும் உணவாகப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தார்கள். உழவரை நம்பி வாழ்ந்த உழவர் அல்லாதோரைத் தான் ‘தொழுதுண்டு பின் செல்பவர்’என வள்ளுவன் சொல்லி இருக்கக் கூடும்;. உழுதே உண்ணும் சமூகமானது எளிமையானதாக தேவைகள் அதிகம் கொண்டிராத  ஒருவகைத் தன்னிறைவுள்ள subsistence என ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய சீவனம் உறுதிப்படுத்தப் பட்ட சமூகமாக இருந்திருக்கும். கபடம் தெரியாத அவ்வகை சமூகத்தினூடாகத் தான் நாமும் பயணித்து வந்திருக்கிறோம். உலகின் சில பாகங்களில் அவ்வகை அடிப்படைக் கட்டமைப்புக் கொண்ட அபூர்வமான சமூகங்கள் இன்னும் சில இருக்கத்தான் செய்கின்றன. வந்த பாதை காலப்போக்கில் எல்லா விவசாய சமூகங்களையும்; போலவே எம்மவரும் செழிப்பு என்ற செல்வ நிலையில் … Continue reading இயற்கையோடு இணைக்கவென இரு வாரங்கள் தாய் மண்ணில்!