ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா
தமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா. கடந்த வருடம் வீரேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்கள் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். அகம்பாவம் படத்தில் நடித்து வருகிறார். நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் ஜெயலலிதா. அவரை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றேன். அவருக்கு பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரை உண்மையாக பின்பற்றுபவராக இருந்து வருகிறேன்.
எந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும் நானும் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். அவர் விட்டுப் போன கனவுகளை நிறைவேற்றுவதே அவரை பின் தொடரும் கட்சித் தொண்டர்கள் கடமையாக நினைக்கிறேன்.
அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்படுவதாக கேள்விப்படுகிறேன். ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. சக நடிகையான நித்யா மேனன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் என கேள்விப்பட்டேன். நித்யா மேனனுக்கு அது பெரும் பாக்கியம். அம்மாவாக வாழுங்கள் படத்தில். வாழ்த்துகள் உங்களுக்கு’’. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Related News

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா
தமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா.Read More

ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அக்ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில்Read More