ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…

ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…

நாங்கள் சனநாயகத்தை நிலைநாட்டத் தான் வாக்களிக்கிறோம். யாரையும் பிரதமராக ஆதரிக்க மாட்டோம். எத்துனை வீரவசனங்கள். நம்மவர்கள் எத்துனை வாக்குறுதிகளை அளித்தாலும் நம்மவரை நம்மக்கள் யாரும் நம்பத்தயாராக இல்லை என்பதற்கு காரணமே இந்த மந்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திரனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே… கிளியே உன்னை அடித்துத் தின்ன பூனை ஈற்றில் வெளியே வந்துவிட்டது. ரணில் ஜயாவை ஆதரிக்கத்தான் போகிறோம் என்றால் அதை முதலில் இருந்தே சொல்லிவிட்டு செய்யவேண்டியது தானே… இப்போதும் தாங்கள் பெரிய விற்பன்னர்கள் மாதிரி ஜக்கிய தேசிய முன்னணி யாரை பிரதமராக நியமிக்கிறதோ அவரை ஆதரிக்க நாங்கள் தயார் என 14லும் கையொப்பம் இட்டு சனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. ரணில் என்று சொல்ல கூச்சம் போலும்… புதன் மாலை கூடிய ஜக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றக்குழு ரணில் மட்டுமே தமது பிரதமர் வேட்பாளர் என ஏகமனதாக முடிவெடுத்ததன் பின்னர் ஏன் இந்த கண்கட்டு வித்தை. அது சரி உங்கள் ஆதரவின்றி ரணில் தரப்பால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது. இப்படி ஆளும் தரப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கிக்கொண்டு எவ்வாறு எதிர்கட்சி வரிசையில் இருப்பது? எவ்வாறு எதிர்கட்சித்தலைவராக இருப்பது? அதுவும் சனநாயக விரோத செயல்பாடல்லவா? அப்ப கூடவே எதிர்கட்சித் தலைவர் பதவியையும் துறந்துவிட்டதாக கடிதம் அனுப்ப வேண்டியது தானே? அது சரி ஆதரவு வழங்கியமைக்காக வரும் பெப்பிரவரி 4க்குள் இனப்பிரச்சனைக்கு நிரந்தரதீர்வு என்றாராம் ரணில் ஜயா! என்ன இன்னொரு கடிதம் தந்துள்ளாரா? அதையாவது முன்கூட்டியே எங்களுக்குக் காட்டுவீர்களா? ஏனென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் ரணில் ஜயாவால் என்ன தீர்வைத் தரமுடியும் என்று தமிழ் மக்களாகிய எங்களுக்குத் தெரியவில்லை? உங்களுக்கு அந்த வெளிச்சம் தெரிந்தால் விளக்குங்களேன். அதை வெளியிட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பு அதிகமாகிவிடும் என மட்டும் பூச்சாண்டி காட்டாதீர்கள்… ஏனென்றால் ஈற்றில் அவர்களின் வாக்கும் ஒரு சர்வசன வாக்கெடுப்பில் புதிய அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு வேண்டும் என்பது எமக்கு நன்றாகத் தெரியும்… அது சரி உங்களிடம் இருந்து படித்து ரணில் ஜயா உங்களை விடபடு சிமாட் போங்கள்.. நீஙகளாவது அடுத்த தீபாவளிக்குள் வருட முடிவிற்குள் 2016க்குள் என்றீர்கள்… ரணில் ஜயாவோ இரண்டு மாதத்திற்குள் என்கிறாரே!!! இருக்க இனி என்ன… வரும் மார்ச் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரிலும் சவாலை எதிர்கொள்ளும் ரணில் அரசிற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பைச் செய்யுங்கள் என ஜ.நா மனித உரிமைகள் செயலாருக்கென ஒரு கடிதத்தையும் சேர்த்து இப்போதே எழுதி கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டியது தானே!!! எங்கள் ஆதங்கங்கள் எல்லாம் சிங்களத் தலைமைகள் தம் இருப்பிற்காக அவ்அவ்ப்போது பயன்படுத்திவிட்டுச் செல்லும் கருவேற்பிலைகளாக தமிழ் தலைமைகள் இருப்பது மரணவலியுடன் வாழும் தமிழினத்தை நீங்களாகவே கொன்று புதைப்பதற்குத் சமன்.

கீழ்வரும் செய்திகள் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தளத்தில் கடந்த சிலநாட்களில் மட்டும் வெளியானவை… ஒருமுறை நினைவு படுத்தலுக்காக…

நாம் எந்த பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லைஇ நடக்கப்போவதுமில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக கொண்டுவரும் முனைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக சிலர் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இதேவேளைஇ ஏற்கனவே ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போதுஇ ரணிலிடம் கூட்டமைப்பு 14 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும்இ அதில் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றும் செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

மக்களின் ஆணையினை விற்று தாம் ஒருபோதும் விலைபோக தயாராக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

சரவணபவான் – மைத்திரி, மகிந்த அரசு ஜனநாயகத்தை மீறியுள்ளது என்பதைச் சட்டரீதியாக நிரூபிக்கவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே கூட்டமைப்பு உறுப்பினர்களும் சத்தியக் கடதாசியில் கையொப்பம் இட்டனர். கூட்டமைப்பில் உள்ள 14 உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டுடனேயே கையொப்பம் இட்டுள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய விடயமாக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா இல்லையா என விவாதிக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ரணிலுக்கு ஆதரவாகக் கை தூக்கமாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்று தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவை எதிர்க்கவும் இல்லைஇ ரணிலை ஆதரிக்கவும் இல்லை. எம்மைபொறுத்தவரை இருவருமே ஒன்று தான் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Nehru Gunaratnam


Related News

 • ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…
 • ad
 • முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு
 • மாவீரர்கள் மீதான சத்தியம்!
 • தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”
 • தாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே ?
 • அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *