Friday, December 7th, 2018

 

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இரட்டை கத்திக்குத்து

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்விஸ் தெரு, ஜார்விஸ் தெரு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் காயமுற்ற 35 வயதுடையவரை மீட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிலிர்த்து நேரத்தில் உயிரிழந்திருந்தார். அத்தோடு மற்றுமொருவர் உணவகம் ஒன்றில் காயமடைந்த நிலையில் மீட்டதாகவும், அவரை விசாரணை செய்த பொலிஸார் அவர் மீது இரண்டாவது கொலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் இந்த கத்திக்குத்து சம்பவத்துடன் சேர்த்து இந்த வருடத்தில் ரொறன்ரோவில் நடைபெற்ற 92 ஆவது படுகொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலவசமாக குழந்தையை பெற்றுக்கொடுக்கும் “மரிசா“

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண் ஒருவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த பெண் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவை சேர்ந்த மரிசா என்ற பெண் ஒருவர், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தருகிறார். குழந்தை பெற முடியாதவர்களுக்கு உதவவே 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக குழந்தை பெற்றெடுத்து தருகிறார் இந்தக் கனடியப் பெண்மணி. ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் மரிசா “மலேனா” என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. அவர் கூறும் போது, “நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன். குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா எனRead More


தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி

சீனாவின் பீஜிங்கை  சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார். மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்–மந்திரி பதவியை வகித்த போது ஆஷியானா வீட்டு வசதி ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தக் காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வக்கீல் வாரிஸ் அலி ஜான்ஜூவா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை நீதிபதி சையத்Read More


அரசு மிக திடமாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் அரசாங்கம் மிகவும் திடமாகவே உள்ளது என அந்நாட்டு பிரதமர் எத்துவா பிலிப் தெரிவித்துள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று(வியாழக்கிழமை) இரவு வழங்கியுள்ள விசேட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ‘ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் தங்கள் உரிமைக்காக போராட வரவில்லை. மாறாக, பொலிஸாருடன் மோதவும், சேதம் விளைவிக்கவும் மட்டுமே வருகின்றனர்!’ எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறை தொடர்பிலான பல்வேறு தரவுகள் எம்மிடம் உள்ளன. அதில் பலர் வன்முறைகளை மனதில் கொண்டு மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் எனவும் எத்துவா பிலிப் சாடியுள்ளார். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளிடம் சிக்கி கோழி இறைச்சி போன்று வாட்டப்படுகின்றார்கள். இதுபோன்ற பிரான்ஸை நாம் பார்க்க விரும்பவில்லை. அரசு மிக திடமாகவும், நிலைப்பாட்டில் உறுதியாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், பதவி விலகும் எண்ணம் உள்ளதா என கேட்கப்பட்டRead More


சோனியா மருமகன் அலுவலகத்தில் அமலாக்கதுறை ரெய்டு

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பிரியங்காவின் கணவர் ராபர்ட்வாத்ரா. இவர் மீது ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது தொடர்பாக வழக்குகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். சமீபத்தில் நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாத்ராவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.


இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு

நாட்டின் விவசாய சமூகத்திற்காக அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது மற்றுமொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நாட்டின் விவசாய சமூகத்தின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வழங்கியிருக்கும் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட நீர்ப்பாசன செயற்திட்டங்களில் இரண்டாவது கட்டமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான கிளிநொச்சி, இரணைமடு நீர்த்தேக்கத்தின் புனர்நிர்மாணப் பணிகள் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நீர்த்தேக்கத்தில் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் 9,180 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், 21,000 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டுRead More


ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் – நமீதா

தமிழில் எங்கள் அண்ணா, ஏய், சாணக்கியா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் நமீதா. கடந்த வருடம் வீரேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்கள் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். அகம்பாவம் படத்தில் நடித்து வருகிறார். நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய அரசியல் ஆளுமைகளுள் முதன்மையானவர் ஜெயலலிதா. அவரை மட்டுமே நினைத்து அரசியலுக்கு வந்தேன். அவர் கையால் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றேன். அவருக்கு பின்பு அரசியல் களம் பக்கம் வரவில்லை. அவரை உண்மையாக பின்பற்றுபவராக இருந்து வருகிறேன். எந்த அரசியல் ஆதாய சார்பும் நான் எடுக்கவில்லை. இந்த உண்மையை மட்டுமே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரின் இல்லாமையை நாடும் நானும் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். அவர் விட்டுப் போன கனவுகளைRead More


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி திணறல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்டு ஆகி வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும், மார்கஸ் ஹரிசும் மிகவும் கவனத்துடன் பேட் செய்தனர். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின்,  மார்கஸ்Read More


விஜய் மல்லையா மனு – அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல மதுபான நிறுவன தொழிலதிபரான, விஜய் மல்லையா, கடன் மோசடி செய்ததாக, பல வங்கிகள், வழக்குகள் தொடர்ந்தன. இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்ற வாளி என அறிவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை, அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியும். இந்த மனுவை எதிர்த்து, மல்லையா தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டும்,Read More