Thursday, December 6th, 2018

 

பாரிய அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்பு: இன்று 101ஆம் ஆண்டு நினைவுதினம்

கனடாவில் பாரிய மனித அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்புச் சம்பவத்தின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். ஹலிஃபக்ஸ் துறைமுகத்தில் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இரண்டு போர்க்கால கப்பல்கள் மோதிக்கொண்டதில் சுமார் 2000 மக்கள் உயிரிழந்தனர். இதனை நினைவுகூர்ந்து இன்று (வியாழக்கிழமை) ஃபோர்ட் நீதம் நினைவுப் பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கனேடிய நேரப்படி காலை 9.04இற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் பிரார்த்தனை இடம்பெறவுள்ளது. இரு கப்பல்களும் மோதிக்கொண்ட குறித்த நேரத்தில் இந்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஃபோர்ட் நீதம் நினைவுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் மணி ஒலிக்கப்பட்டு இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கடந்த 1917ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இமோ என்ற நிவாரண கப்பலும், பிரான்ஸ் நாட்டின் ஆயுதக் கப்பலும் ஹலிஃபக்ஸ் துறைமுகத்தில் மோதி வெடித்துச் சிதறின. இச்சம்பவத்தில் 2000 பேர்Read More


ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழப்பு

மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 63 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புடன் சேர்த்து கடந்த செவ்வாய்க்கிழமை ரொறன்ரோ பெரும்பாகத்தில் 6 மணித்தியாலங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எரிந்தலை ஸ்டேஷன் ரோடு மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7:45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது சம்பவ இடத்திலேயே பாதசாரியான குறித்த 63 வயதுடைய பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி விசாரணைக்குற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இதற்க்கு முன்னர் Malton பகுதியில் தூண் நாடும் வாகனம் மோதி 79 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார். அத்தோடு ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கஞ்சாவை பயன்படுத்த வயதெல்லை – கியூபெக்கில் சட்டமூலம்

கஞ்சாவை பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 21ஆக அதிகரிக்கும் சட்டமூலமொன்று கனடாவின் கியூபெக் மாகாண அரசால் முன்வைக்கப்பட்டது. அத்தோடு, வீதிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்படுத்துவதை தடைசெய்யும் மற்றொரு சட்டமூலமும் முன்வைக்கப்பட்டது. குறித்த இரு சட்டமூலங்களும் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டன. கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதோடு, அதனை பயன்படுத்துவதற்கான வயதெல்லையாக 18 மற்றும் 19 ஆகிய இரு வயதெல்லைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த வயதில் கஞ்சாவை பயன்படுத்துவது மூளை வளர்ச்சியை பாதிக்குமென்பது வைத்திய நிபுணர்களின் கருத்தாகவுள்ளது. இந்நிலையில், அதனை பயன்படுத்தும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பாக கியூபெக் மாகாணம் கடந்த ஒக்டோபர் மாதம் வாக்குறுதி வழங்கியிருந்ததோடு, அது தொடர்பான பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் தடை விதிக்கப்பட்டதாலே நெருக்கடி நிலை

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டதாலேயே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் நிலமை மற்றும் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவோம் – சீனா

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக போர் இருந்து வந்தது. அமெரிக்க அரசு சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் முதல் 250 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டாலரின் மதிப்பு சுமார் ரூ.70) அளவுக்கு கூடுதல் வரியை விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக வரியை விதித்தது. இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகப்போர் உலகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதிRead More


ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்

ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விபத்துக்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துச் சம்பவம் பற்றி கூறியதாவது:- “ தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படைRead More


ஜனாதிபதிக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்வது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை

ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனின் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவரை முன்வைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய அரசியல் சிக்கலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்வு ஒன்றிற்கு வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.


நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…!

ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள் என்பதை கண்டறிந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் பாரம்பரிய விதை ரகங்களை அடையாளம் கண்டறிந்து சேமிக்கத் தொடங்கினார். சுமார் 170 பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்த அவர், அந்த நெல் ரகங்களை சக விவசாயிகளோடு அவற்றை இலவசமாக பகிர்ந்து கொள்ளவும் செய்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள “தணல்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் பங்களிப்போடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் “நெல் திருவிழா” நடத்தி வந்தார். இந்த நெல் திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இயற்கை விவசாயிகள் வந்து சென்றனர்.Read More


மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியுமா?

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதி பேர் அதாவது, பெருவாரியான மனநோயாளிகள் தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர். மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றைRead More