Wednesday, December 5th, 2018

 

மாணவர் மீது பாலியல் சுரண்டல் – ஆசிரியர் கைது

முன்னாள் மாணவர் மீது பாலியல் சுரண்டல் நடத்தை பற்றிய விசாரணையைத் தொடர்ந்து ஆத்தபாஸ்கா பகுதியை சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் சார்லஸ் பீமிஷ் என்ற 38 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர் அதாபாஸ்கா மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதுடன், அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தைப் பற்றியோ அல்லது வேறு தகவலோ தெரிந்தால் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எட்மன்டன் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

எட்மன்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எட்மன்டன் Grande Prairie 132 Avenue மற்றும் 100 Street பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். RCMP தகவலில் படி, ஒரு திருடப்பட்ட வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயற்சி செய்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள RCMP பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பொதுமக்களின் உதவியை நாடியுள்ள ஒட்டாவா பொலிஸார்

ஒட்டாவா நகரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் இறுதியாக ஒட்டாவா நகரின் கிழக்கில் கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் திகதி உள்ளூர் பள்ளி வளாகத்தில் சரியாக மாலை 4:30மணி மற்றும் 5-மணியளவில் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்களை 613-236-1222, ext. 8921-ல் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அத்துடன், குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்குரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மிசிசாகுவா விபத்து – பெண் பாதசாரி பரிதாபமாக உயிரிழப்பு

ஒன்ராறியோவின் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தை அடுத்து குறித்த பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார். இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்யவேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார். அதேநேரம்Read More


தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு சபாநாயகர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு அதிகாரம் இருப்பதாக மாயை ஒன்றை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஐக்கிய தேசிய கட்சி ஊடகங்களுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியினர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளுக்கு அழுத்துங்களை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டுமென்றார்.


ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்போது மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசியலமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக பாராளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நீதிமன்றில் கூறியள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதானRead More


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.


பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் கலந்துரையாடி தீர்வொன்று எட்டவுள்ளதாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். கடந்த மாதங்களில் எருபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. எனினும் கடந்த நவம்பர் மாதம் மூன்று தடவைகள் எருபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் ஒரு தடவையே குறைக்கப்பட்டதுடன், அதுவும் இரண்டு சதவீதத்தால் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.


நாடே திரும்பி பார்க்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் – முதல் அமைச்சர் பழனிசாமி

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தபின் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, காவிரி பிரச்னையில் நாடாளுமன்றம் முடங்கியதால்தான் நாடே நம்மை திரும்பி பார்த்தது.  அது போல வரும் நாட்களில் நமது செயல்பாடு இருக்கRead More