Tuesday, December 4th, 2018

 

16 குற்றவியல் வாகன ஓட்டுனர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டனர் பொலிஸார்

16 குற்றவியல் வாகன ஓட்டுனர்களின் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர். யார்க் பிராந்திய பொலிஸ் (YORK REGIONAL POLICE) பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுனர்களின் குற்றங்களை பொதுமக்கள் பார்வைக்கு விடுவதென கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தமது முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய பொலிஸார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர். இதில் கடந்த 3 நாட்களில் (நவம்பர் 30 முதல் நேற்று வரை) 27 குற்றவியல் தொடர்பான ஓட்டுநர் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசித்து வருகின்ற நிலையில், குறித்த குற்றவியலாளர் பட்டியலில் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்டோர் விபரம். James MOFFATT, 24, Town of East Gwillimbury Impaired Driving – Alcohol OverRead More


குத்துச்சண்டை வீரரை கொலைசெய்தவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

யூ.எப்.சி. குத்துச்சண்டை வீரர் ரையன் ஜிம்மோவை கொலைசெய்த குற்றத்திற்காக, எட்மண்டனைச் சேர்ந்த 26 வயதான ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்மண்டன் நீதிமன்றத்தால் நேற்று (திங்கட்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனைக்காலம் நிறைவடைந்த பின்னர், மேலும் 8 வருடங்களுக்கு வாகனங்களை செலுத்தவும் தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கெட்ஸ்செல் என்பவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் கெட்ஸ்செல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கெட்ஸ்செல்லின் வாகனமும் ஜிம்மோவின் வாகனமும் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்டது. இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாக ஜிம்மோவை கெட்ஸ்செல் தனது பிக்கப் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச்சென்றார். படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டRead More


ஒன்றாரியோ இடைத்தேர்தல் – எந்த கட்சி முன்னிலையில் ?

கனடாவின் கிழக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இத்தேர்தலில், மொத்தமாக உள்ள 238 வாக்களிப்பு நிலையங்களில், சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இதில் கொன்சர்வேற்றிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒன்றாரியோ மாநகரசபை உறுப்பினர் மைக்கல் பாரெட் 63 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் மேரி ஜீன் மக்ஃபோல் 32 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளார். ஏனையோர் மிகவும் குறைந்தளவான வாக்குகளையே பெற்றுள்ளனர். கிழக்கு ஒன்றாரியோவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுண் கடந்த மே மாதம் காலமானார். அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதேவேளை, ஆளும் கட்சியின் மீது காணப்படும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.


பொதுத் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் சட்ட ரீதியான அரசாங்கம் வேண்டும்

பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் என்று கூறிக் கொண்ட அனைவரும் அரசியலமைப்பின் படி செயற்படுமாறு நாம் கூறுகின்றோம். அரசியலமைப்புப் படி செயற்படுவதாகவே நாம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளோம். அனைத்து கட்சிகளும் இணக்கத்துக்கு வரும் போது தேர்தலை நடத்துவதென்றால், ஐக்கிய தேசிய முன்னணியும் அதற்கு தயாராக இருக்கின்றது. முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் இருந்தால்Read More


போராட்டக்காரர்களுடன் அரசு சமரசம் – எரிபொருள் வரி உயர்வு நிறுத்தம்

பல வாரங்களாக பிரான்சில் நடைபெற்றுவந்த போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருள் வரி உயர்வை நிறுத்திவைப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்பேரில் பிரதமர் எடுவார்ட் பிலிப்பே எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சமரசம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் ஆடை போராட்டம் தற்போது அரசாங்கத்தின் மீது பரவலான கோபத்தை பிரதிபலிப்பவையாகவும் ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரானவையாகவும் வளர்ந்துள்ளன. அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து நால்வர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முக்கிய கொள்கையை பிரெஞ்சு ஜனாதிபதி நிறுத்துவது இதுவே முதல்முறையாகும். பிரான்சில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சியில் தற்போது எரிபொருள் வரி உயர்வை நிறுத்துவதற்கு மக்ரோனின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பப்படுகிறது.


ஐன்ஸ்டீனின் கடிதம் ரூ.10 கோடிக்கு ஏலம்

நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1954ம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய மதம் தொடர்பான கடிதம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.இந்த கடிதம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடி) மதிப்பில் ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. God letter என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கடிதம், அறிவியல் மற்றும் மதம் தொடர்பான விவாதத்தை அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.


ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்

நியூசவுத்வேல்ஸ் மெட்ரோ கேப்டன் ஆலி டேவிஸ் ஆஸ்திரேலிய தேசிய ஒருநாள் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான  கிரிக்கெட்டில் நாதர்ன் டெரிடரி அணிக்கு எதிராக சாதனை இரட்டைச் சதம் அடித்ததோடு ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையையும் நிகழ்த்தினார். ஆலி டேவிஸ் 115 பந்துகளில் 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 2வது சதம் 39 பந்துகளில் விளாசப்பட்டது. இதனையடுத்து நியூசவுத்வேல்ஸ் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  406  ரன்கள் எடுத்து  இமாலய ரன் குவிப்பை நிகழ்த்தியது. 18 வயதான ஆலி டேவிஸ்  17 சிக்சர்களை விளாசினார். இதில் 102 ரன்கள் வந்து விட்டது.  இதில் 40வது ஓவரை வீசிய ஜேக் ஜோன்ஸ் என்ற ஸ்பின்னரின் 6 பந்துகளிலும் சிக்சர் பறக்க விட்டார். இந்த இன்னிங்சில் 14 பவுண்டரிகளும் அடங்கும். இந்த தொடர் ஒருநாள் தொடராக மாற்றப்பட்டRead More


அரசியல் நெருக்கடி ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் – சிறிசேன

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் சிறிசேன கூறியுள்ளார். இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக, அதிபர் மைத்ரிபால சிறிசேன சமீபத்தில் அறிவித்தார். இதனால், இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை உருவானது. பார்லிமென்டில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால், இலங்கையில், குதிரை பேரங்களும், கட்சி தாவல்களும் வெளிப்படையாக நடந்தன.இதையடுத்து, இலங்கை பார்லிமென்டை கலைத்து, அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். பார்லிமென்டுக்கு ஜனவரி மாதத்தில், தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிபர் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில், ராஜபக்சேவுக்கு எதிராக, இரு முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தோற்கடிக்கப்பட்டார்.Read More


பச்சை மிளகாய்க்கும் காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி – பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.அதனால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன்.காங்கிரஸ் கட்சியின் தீராத அதிகாரப் பேராசையால், தவறுகளால்Read More


லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு கவர்ச்சி காட்டும் அமலாபால்

அமலாபால் நடித்து கடந்த வருடம் ‘வேலையில்லா பட்டதாரி–2’, ‘திருட்டுப்பயலே–2 ஆகிய படங்களும், இந்த வருடம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘ராட்சசன்’ படங்களும் திரைக்கு வந்தன. இதில் ராட்சசன் படம் வசூல் குவித்தது. இப்போது ஆடை, அதோ அந்த பறவை போல ஆகிய 2 தமிழ் படங்களிலும், அது ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். ‘ஆடை’ படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற அவரது தோற்றம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. மீ டூவில் பாலியல் புகார் சொல்லியும் பட உலகை அதிர வைத்தார். மேலும் டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்த அவர் நடிகர் விஷ்ணுவிஷாலை 2–வது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. இருவரும்Read More