Saturday, June 9th, 2018

 

பிரோசாட் பகுதியில் சுற்றித் திரியும் வரும் கடத்தல்காரர்: இளம்பெண்களுக்கு எச்சரிக்கை

பிரோசாட் பகுதியில் பெண்களைக் கடத்தும் ஒரு மர்ம மனிதன், சுற்றித் திரிவதாக கனடா பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இவ்வாறு மூன்று பெண்கள், புகார் அளித்துள்ளதையடுத்தே பொலிஸார் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். பொலிசாரிடம் புகாரளித்த மூன்று இளம் பெண்களும் தங்களைப் பின்தொடர்ந்ததாக கூறிய மனிதனைக் குறித்து கொடுத்த தகவல்கள் ஒரே மாதிரியாக உள்ளதால், ஒருவரே இந்த செயலை மேற்கொண்டிருக்க கூடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த மூன்று பெண்களையும் அந்த நபர் கடத்தவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியுமாயின் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் சட்டமூலம் விரைவில்

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான திருத்தத்தை கஞ்சா தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தில், நாடாளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் சில திருத்தங்களுடன் ஜூலை 1ஆம் திகதி சட்டமாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஜி7 நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடாக கனடா மாறவிருக்கின்றது.< கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. போதைக்காக பயன்படுத்த தடை இருந்தாலும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்படும்Read More


எனது காலத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தேன்

எனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அந்தக் காலத்தில் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் பல சதித்திட்டங்களை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.


11 லட்சம் ‘பெயர்களுடன்’ சூரியனை நோக்கிச் செல்லும் விண்கலம்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான சூரியன், வாயுக்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். சந்திரன், செவ்வாய்க் கிரகங்களுக்கும் மற்றும் பல விண்வெளி ஆய்வுகளுக்கும் இதுவரை விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான், சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் நாசா இறங்கியிருக்கிறது. அதன்படி, சூரியனின் சுற்றுப்புற வெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அதைத் தாங்கக் கூடிய வகையில் ஒரு விண்கலம் உருவாகி வருகிறது. ‘பார்க்கர் சோலார்’ எனப்படும் இந்த விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கி விண்ணுக்குச் செல்லவிருப்பதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன் எந்த விண்கலமும் சென்றதைவிட அதிக நெருக்கமாக சூரியனிடம் சென்று இவ்விண்கலம் ஆய்வு நடத்தும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானி நிக்கோலா பாக்ஸ் கூறும்போது, ‘‘பார்க்கர் சோலார் விண்கலத்தின் சூரிய ஆய்வின்Read More


சூர்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா

சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படத்தில் அனிருத் இசையில் உருவான `சொடக்கு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் வீடியோவை சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாயிஷா தற்போது கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதி ஜோடியாக ஜுங்கா, ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11-ஆம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த ஆண்டு சாயிஷாவுக்கு கொண்டாட்டமாகRead More


காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – இது தான் நானா படேகர்

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர். சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன. ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘Read More


டெல்லியில் பிரபல ரவுடி உள்பட கூட்டாளிகள் 4 பேர் என்கவுண்டரில் கொலை

சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீர்பூர் பகுதியில் டெல்லி போலீசார்  சிறப்பு காவல்துறையுடன் இணைந்து  சந்தேகத்தின் பேரில் நான்கு சந்தேக நபர்கள் கொன்றனர்.சுட்டு கொல்லப்பட்ட  குற்றவாளிகள் ராஜேஷ் பார்தி கும்பலை சேர்ந்தவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர், அவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு  ரூ. 1 லட்சம் பரிசு வ்ழங்குவதா டெல்லி போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த் என்கவுண்டரில்  ராஜேஷ்  பார்தியும் கொல்லப்பட்டார். இந்தில் 6 போலிசார் காயம் அடைந்து உள்ளனர். ராஜேஷ் பாரதி பிரபல ரவுடி ஆவான்  கொலை, மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு மற்றும் திருட்டு சம்பந்தமாக பல வழக்குகளில் குற்றவாளி ஆவார் , மேலும் அரியானா காவல்துறையின் காவலில் இருந்து தப்பி ஓடியவர் ஆவார்.


சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி

சிரியாவில் சர்தானா மாகாணம் அருகே உள்ள இடிலிப் நகர் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. எனவே இந்த நகரை கைப்பற்றும் பொருட்டு ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. வான்வழியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள். மேலும்,  60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால், உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும்  என மீட்புப்படையினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறலாம் எனவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.


ஒரு டொலரும் சிவத்த உண்டியலும் editorial

உங்கள் ஒவ்வொருவருக்கும் “உண்டியல்” என்னும் சொல் தரக்கூடிய உளவியல் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம். அதேபோல் இலவச ஊடகமாகப் பயணிப்பது என்பதும் உளவியல் தாக்கம் மிகுந்தது. இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத இகுருவி ஆண்டு விருது விழாவில் இகுருவி பத்திரிகையை இனி வருங்காலங்களில் ஒரு டொலருக்கு விற்பனை செய்து அதில் வரும் முழு வருமானமும் எங்களால் நடத்தப்படும் “புதிய வெளிச்சம்” செயற்பாட்டு  வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தோம். வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு பல்லாயிரம் டொலர்களை விடுதலையின் உண்டியல் பணமாக  வித்திட்ட மக்கள் நீங்கள்.  எதிர்பார்த்திராத முடிவு வந்தடைந்த பின்பும் வலுவான சமூகமாக புலத்தில் தடம் பதிக்கும் உங்களுக்கு மீண்டும் உண்டியலா என உள்ளுணர்வு உறுத்தலாம். ஒரு பிறவிப்பாளன்  இடத்தில் இருந்து பார்க்கும் போது நாம் எடுத்துக் கொண்ட முடிவு கனதியாக இருந்தாலும் சரியானRead More


எது எப்படியோ, அது அப்படியே

எது எப்படியோ, அது அப்படியே. தேர்தல் முடிந்து விட்டது. எதிர்பார்த்தவாறே முடிவுகள் வெளிவந்து விட்டன. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே கொன்சவேற்றிவ் கட்சி 2015ம் ஆண்டு மே மாதம், ஒ;ன்பதாம் திகதி பற்றிக் பிரவுனைத் தலைவராக தேர்வு செய்தது. அவர் பெற்ற வாக்கு வீதம் 61.8 ஆகும். இவ் வருட முற்பகுதியில் அவர் மீதான, பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவர் தலைபை; பதவியிலிருந்து நீக்கப்படும் வரை கொன்சவேற்றவ் கட்சியை அவர் புதிய பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார். எவ்வாறு தலைமைப் பதவிப் போட்டியில் வெற்றி பெற்றாரோ அவ்வாறே சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற சிறுபான்மையின சமூகங்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் எந்ந சிறுபான்மை அதிகமாகவுள்ளதோ, அங்கு அவர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதாக உறுதியளித்தார். தமிழ்ச் சமூகத்துக்கும் மூன்று ஆசனங்களை ஓதுக்குவதாக கூறப்பட்டதாக அறியக் கிடைத்தது. இந்த மூன்று ஆசனங்களைப்Read More