ஒடிசாவில் மதகலவரம் அரசு 48 மணி நேரங்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்தது

odissaஒடிசாவின் பாத்ராக் பகுதியில் சமூக வலைதளங்களில் இந்து கடவுகளை அவமதிக்கும் விதமாக கருத்து பதிவிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையம் முன்னதாக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வன்முறை வெடிக்கவே வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகத்தை ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தச் செய்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகள் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொழுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது, உடனடியாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். ஒடிசா மாநில சிறப்பு படை பிரிவினர் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பாத்ராக் பகுதியில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ள துணை ராணுவப் படையினர் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இப்போது நிலையானது கட்டுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள 4 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இதற்கிடையே வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளது. பதற்றமான நிலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மாநிலத்தில் மேலும் இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவாமல் இருக்கும் வகையில் மாநில உள்துறை அமைச்சகம் 48 மணி நேரங்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் பொதுமக்களை தூண்டிவிட அனுமதிக்க கூடாது எனவும் பதற்றம் உருவாக கூடாது எனவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்கள் வழியாக போலியான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடமும் உதவி கேட்கப்பட்டு உள்ளது. பாத்ராக் மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ளது.





Related News

  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *